கணவர் மறைவு.. போனில் அழைத்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்.. நேரில் கண் கலங்கிய ரம்பா!

சென்னை : குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டாப் நடிகையாக தற்போது வரை வலம் வருபவர் மீனா. தென்னிந்திய மொழிகள் அனைத்திலுமே டாப் நடிகையாக இருக்கும் மீனா, தென்னிந்திய டாப் ஹீரோக்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்து விட்டார்.

Recommended Video

Meena Husband இறுதிச்சடங்கு..முன்னின்று நடத்தும் பிரபலங்கள்*Celebrity

தற்போதும் மலையாளம், தெலுங்கில் மீனா நடித்து வரும் படங்கள் வரிசையாக ஹிட்டாகி வருகின்றன. தமிழில் கடைசியாக ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் நடித்தார். புகழின் உச்சியில் இருந்த போதே 2009 ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இவரும் மீனாவை போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வருகிறார். விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்யின் மகளாக நைனிகா நடித்துள்ளார்.

மீனா கணவர் மரணத்திற்கு இதுதான் காரணமா

மீனா கணவர் மரணத்திற்கு இதுதான் காரணமா

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் வித்யாசகருக்கு, கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக பல மாதங்களாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நுழையீரல் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் நேற்று உயிரிழந்தார். மாற்று நுரையீரல் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் வித்யாசாகரின் உடல்நிலை மோசமடைந்து, அவரது உயிர் பிரிந்துள்ளது.

இன்று இறுதிச்சடங்கு

இன்று இறுதிச்சடங்கு

48 வயதாகும் வித்யாசாகரின் உடல், மருத்துவமனையில் இருந்து உறுதிச் சடங்குகளுக்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் வித்தியாசாகரின் உடல் தகனம் நடைபெறும் என கூறப்படுகிறது. இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 ட்விட்டரில் குவியும் இரங்கல்

ட்விட்டரில் குவியும் இரங்கல்

மீனாவின் கணவர் மறைவை ஒட்டி ரசிகர்கள் உள்ளிட்டபலரும் சோஷியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் #Meena என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் யாரெல்லாம் என்ன சொல்லி இருக்கிறார்கள் என இங்கே பார்க்கலாம்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

மீனாவின் கணவர் உயிரிழந்ததற்காக மீனாவை போனில் தொடர்பு கொண்டு அவருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பிறகு முத்து, வீரா போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

சரத்குமார்

சரத்குமார்

மீனாவின் கணவர் வித்யாசகரின் இந்த திடீர் மரண செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் குடும்பத்தின் சார்பில் மீனாவிற்கும் அவரது குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சரத்குமார், மீனாவுடன் இணைந்து நாட்டாமை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

ரம்பா

ரம்பா

மீனாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் நடிகை ரம்பா. தனது கணவர் மற்றும் மகளுடன் வந்து ரம்பா, மீனாவிற்கு ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், மீனாவை இப்படி பார்க்கவே கஷ்டமாக உள்ளது என கண் கலங்கி தெரிவித்தார்.

லட்சுமி

லட்சுமி

பிரபல நடிகை லட்சுமி, மீனாவின் வீட்டிற்கு சென்று மீனாவிற்கு ஆறுதல் கூறி உள்ளார். வித்யாசாகரின் உடலுக்கும் அவர் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன்

மீனா நடித்த பாரதி கண்ணம்மா, வெற்றி கொடிகட்டு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் சேரன் தனது மகன், மனைவி ஆகியோருடன் வந்து மீனாவிற்கு ஆறுதல் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X