Don't Miss!
- News
என்ன ராமலிங்கம் எப்படி இருக்க? கொரோனா பரோல் முடிந்து சிறை திரும்பாத கைதிகள்! சாட்டையை சுற்றிய போலீஸ்
- Finance
எல் ஐ சி-யின் புதிய ஜீவன் ஆசாத் திட்டம்.. ரூ.5 லட்சம் பெற என்ன செய்யணும்?
- Lifestyle
பெண்களே! உங்க முகத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சினை வருமாம்...!
- Sports
ஐசிசி-ன் உச்சகட்ட விருதுகள்.. 3 இந்திய வீரர்கள் கவுரவிப்பு.. விராட் கோலியின் மாஸ் கம்பேக் - விவரம்!
- Technology
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Automobiles
2கே கிட்டிகளை குறி வைக்கும் யமஹா! ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களத்தில் இறக்கி பெரிய சம்பவத்தைப் பண்ண போறாங்க
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
உன் வாழ்க்கை உன் கையில்... புதிய நம்பிக்கை வாசல்... ரஜினி, கமலின் மோட்டிவேஷன் புத்தாண்டு வாழ்த்து
சென்னை: உலகம் முழுவதும் 2022ம் ஆண்டு முடிந்து 2023 புத்தாண்டு இன்று பிறந்துள்ளது.
சென்னை, தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் பல கோடி மக்கள் 2023 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
அதேபோல் 2023 பிறந்ததை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் கோலிவுட் ரசிகர்களுக்கு ரஜினி, கமல், விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் க்யூட்டாக புத்தாண்டு வாழ்த்துக் கூறியுள்ளனர்.
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே... துணிவு ட்ரெய்லரை பங்கமாய் கலாய்த்த ப்ளு சட்டை மாறன்...!

உன் வாழ்க்கை உன் கையில்
2023 புதுவருடம் பிறந்ததை உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக் கூறியுள்ளார். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அதன் கீழே 'உன் வாழ்க்கை உன் கையில்' என்ற ஹேஷ்டேக்கையும் ஷேர் செய்துள்ளார். ரஜினியின் தாரக மந்திரமாக பார்க்கப்பட்டும் உன் வாழ்க்கை உன் கையில், தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

உலகநாயகனின் வாழ்த்து
அதேபோல், உலக நாயகன் கமல்ஹாசனும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து. #NewYear2023" என கூறியுள்ளார். கமலின் புத்தாண்டு வாழ்த்தை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சியான் விக்ரம் வாழ்த்து
நடிகர் சியான் விக்ரமும் தனது புத்தாண்டு வாழ்த்தை டிவிட்டர் வழியாக தெரிவித்துள்ளார். இந்தாண்டில் மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ள விக்ரம், தற்போது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் பிஸியாக உள்ளார். இதனிடையே அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்தில், "வருடம் மாறலாம். வாழ்க்கை மாறலாம். உறவு மாறலாம். உள்ளம் மாறலாம்.. என்றும் மாறாத என் அன்பானவர்களோட இதயங்களுக்கும் இல்லங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். Let's make the pursuit of happiness the greatest goal of this year! Happy 2023!!" என பதிவிட்டுள்ளார்.

நன்றியுடன் புத்தாண்டு வாழ்த்து
அதேபோல், நடிகர் கார்த்தியும் புத்தாண்டு வாழ்த்துக் கூறி ட்வீட் செய்துள்ளார். நன்றியுடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள கார்த்தி, அதற்காக அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். இந்தாண்டில் அவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் வெற்றிப் பெற்றன. இதனையடுத்து தனது படங்களை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ள கார்த்தி, அனைவரும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என க்யூட்டாக ட்வீட் செய்துள்ளார்.

சிம்பு, த்ரிஷா வாழ்த்து
நடிகர் சிம்பு அவரது பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு போஸ்டருடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், நடிகை த்ரிஷாவும் தனது ராங்கி படத்தின் ப்ரோமோஷன் டீசருடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், சத்யராஜ், சிவகுமார் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் திவ்யா சத்யராஜ். இதில், சத்யராஜை பின்னால் இருந்து கட்டிப் பிடித்துள்ளார் சிவகுமார். இதனை ஷேர் செய்துள்ள சத்யராஜின் மகள் திவ்யா, இந்த சமூகத்துக்கு நான் என்ன திருப்பிக் கொடுக்க வேண்டும் என கற்றுக்கொடுத்த அப்பா சத்யராஜ், சிவகுமார் மாமா இருவரிடம் இருந்து தான் என பதிவிட்டுள்ளார். மேலும் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.