நல்லக்கண்ணு மறைவு.. ரஜினி, கமல் இரங்கல்!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை பாதிக்கப்பட்டு ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் உயிரிழந்தார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு உடல்நிலை பிரச்சனை காரணமாக, தீவிர சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பி இருந்தார். ஆனால், திடீரென அவரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, கடந்த 20 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

Nallakannu Death

நல்லகண்ணு மறைவு: வயது மூப்பின் காரணமாக அவரது சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக சொல்லப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் பிற்பகல் 1.55 மணிக்கு காலமானதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரின் மறைவுக்கு துணை குடியரசுத் தலைவர் சிவி ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை என பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல் இரங்கல்: நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார். ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும் என பதிவிட்டுள்ளார்.

ரஜினி இரங்கல்: அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது எக்ஸ் தள பக்கத்தில் மாறாத கொள்ளபிடிப்புடன் வாழ்ந்த மறைந்த தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X