»   »  வெளியானது "என் அப்பா".. தங்களது அப்பாக்களை நினைவு கூர்ந்த திரை பிரபலங்கள்!

வெளியானது "என் அப்பா".. தங்களது அப்பாக்களை நினைவு கூர்ந்த திரை பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமுத்திரக்கனி தயாரித்து, இயக்கி, நடித்துள்ள அப்பா படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படம் குழந்தை வளர்ப்பைப் பற்றி பேசும் படம் என்பதால் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று விதமான அப்பாக்களைப் பற்றி இப்படம் பேசுவதாக சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். அதோடு, இன்றைய கல்விச் சூழலைப் பற்றியும் இப்படத்தில் பேசப்பட்டுள்ளது.


இப்படத்தின் விளம்பர முயற்சிகளில் ஒன்றாக, சினிமா பிரபலங்களை தங்கள் அப்பா பற்றி பேசி வீடியோவாக வெளியிடும்படி படக்குழுக் கேட்டுக் கொண்டது. இன்று அப்பா படம் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோக்களிலிருந்து சில..


என் அப்பா...

என் அப்பா...

அதன்படி, தமிழ் நடிகர்கள், நடிகைகள் மட்டுமின்றி, பிரபல இயக்குநர்கள், கவிஞர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் மலையாள நடிகர், நடிகைகளும் தங்களது அப்பாவைப் பற்றிப் பேசி உருக்கமான வீடியோக்களை வெளியிட்டனர்.




சூர்யா...

தன் தந்தையும், நடிகருமான சிவக்குமாரைப் பற்றி நடிகர் சூர்யா பேசிய வீடியோ இது. இதனை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.


அபி...

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், தமிழில் திறமையான நடிகைகளுள் ஒருவராக அறியப்படுபவர் நாடோடிகள் அபிநயா. அவர் தன் தந்தையின் தியாகத்தைப் பற்றி பேசும் உருக்கமான வீடியோ இது.




சகாயம்...

நேர்மையான அதிகாரியாக அறியப்படும் சகாயம் ஐஏஎஸ் தனது அப்பாவைப் பற்றி பேசிய வீடியோ இது.


கௌதம்மேனன்...

வாரணம் ஆயிரம் படம் மூலம் அப்பா, மகன் இடையேயான பாசத்தை படமாக்கிய பிரபல இயக்குநர் கௌதம்வாசுதேவ் மேனனின் அப்பாவைப் பற்றிய வீடியோ இது.




சிவக்குமார்...

தமிழில் சிறந்த நடிகராக அறியப்படும் சிவக்குமார், சமூகத்தில் பொறுப்பான தந்தையாகவும் திகழ்கிறார். அவர் தன் அப்பாவைப் பற்றி இந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.


மஞ்சு வாரியார்...

மலையாள நடிகை மஞ்சு வாரியார் தன் அப்பாவைப் பற்றி பேசும் வீடியோ இது. இதனை 50 ஆயிரத்திற்கும் மேலானோர் பார்த்துள்ளனர்.


இளையராஜா...

ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்த பெருமைக்குரிய இசைஞானி இளையராஜா தனது அப்பாவைப் பற்றி இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.


ஜெயம் ரவி...

ஜெயம் ரவி...

இதேபோல், நடிகர் சூரி, இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குநர்கள் சேரன், ஏஆர் முருகதாஸ், கேஎஸ் ரவிக்குமார், மலையாள நடிகர் மோகன் லால், ஜெயம் ரவி போன்றவர்களும் தங்கள் அப்பாக்கள் பற்றி வீடியோ பதிவாகப் பேசி, இந்தப் படத்தின் புரமோஷனுக்கு உதவியுள்ளனர்.




English summary
For the movie Appa's promotion celebrities like Surya, Sivakumar have given a byte about their father.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos