»   »  வலிமையாகப் பேசிய யதார்த்த சினிமா 'அறம்'! - பிரபலங்கள் பாராட்டு

வலிமையாகப் பேசிய யதார்த்த சினிமா 'அறம்'! - பிரபலங்கள் பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil
நயன்தாராவின் அறம் விமர்சனம்- வீடியோ

சென்னை : கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்திருக்கும் படம் 'அறம்'. நேற்று வெளியாகியிருக்கும் இப்படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

நீர் அரசியல் பற்றியும், அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறை பற்றியும் ஆழமாகப் பேசியிருக்கும் அறம் படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.

'அறம்' படத்தில் நயன்தாராவின் நடிப்பையும், வலிமையாகச் சொல்லப்பட்ட வசனங்களையும் பலர் பாராட்டியிருக்கிறார்கள்.

வலிமையான யதார்த்த சினிமா

அறம், கருத்தை வலிமையாகச் சொன்ன யதார்த்த சினிமா. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இப்படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கும் மரியாதை.' என இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

உச்சங்களை தொடுவார் நயன்தாரா

சிறந்த படங்களில் ஒன்று #அறம். இயக்குனர் ந.கோபி நயினாருக்கு முதல் பாராட்டு. நயன்தாராவின் கதை அறிவும், உழைப்பும் வேலைக்காரனில் பணிபுரியும்போது வியப்பில் ஆழ்த்தியது. மிகச்சிறந்த நடிகையாக உச்சங்களைத் தொடுவார். ராஜேஸ் தகுதியான, மிகச்சிறந்த தயாரிப்பாளர். அறம் குழுவிற்கு வாழ்த்துகள்! என தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

ப்ளாக்பஸ்டர் அறம்

மனதைக்கவரும் 'அறம்'. அறம் இந்த வருடத்தின் மிகச்சிறந்த ப்ளாக்பஸ்டர் திரைப்படம். நயன்தாராவின் சிறப்பான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது என இசையமைப்பாளர் தமன் பாராட்டியுள்ளார்.

நிஜத்தில் மதிவதனிகள் வேண்டும்

அறம் படம் பார்த்தேன். படம் என்ன சொல்கிறதோ அதற்காக பிடித்திருக்கிறது. இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதற்கே பாராட்டலாம். நிஜத்தில் இந்த மாதிரியான மதிவதனிகள் ஆட்சியர்களாக உருவாகவேண்டும் என விரும்புகிறேன் என ஆர்.ஜே.பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.

பாசிட்டிவ் விமர்சனங்கள்

அறம் படம் பற்றி நிறைய பாசிட்டிவ் விமர்சனங்களைப் பார்க்கமுடிகிறது. அறம் குழுவிற்கு வாழ்த்துகள் என ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு ட்வீட் செய்திருக்கிறார்.

புத்தி சொல்லும் படம்

புத்தி சொல்லும் படம்

அனைவருக்கும் புத்தி சொல்லுகிற அருமையான திரைப்படம் 'அறம்'. அறம் உள்ளவர்களால் ஆய்வு செய்யப்படுமானால், சர்வதேச அளவில் விருதுகள் பெறுகிற படம். சமூக அக்கறை, மனித நேயம், தன்னம்பிக்கை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சாட்டையடி கொடுக்கிறது. எனக் கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்.

English summary
Many have praised Nayanthara's performance and strongly cited scriptures in the movie 'Aramm' directed by Gopi Nainar. The fans are celebrating this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X