மெர்சல் டீசர் மெர்சலா இருக்குதுங்ணாவ்..! - ட்விட்டரில் பாராட்டும் பிரபலங்கள்
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு ஆகியோர் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.
விஜய் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் தொடர்ந்து யூ-ட்யூபில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது 'மெர்சல்' டீசர்.
'மெர்சல்' டீசரைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலர் டீசர் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக ட்விட்டரில் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர்.
ராய் லக்ஷ்மி :
சூப்பர்ப் டீசர்... மாஸ். வே டு கோ என ட்வீட் செய்திருக்கிறார் 'ஜூலி 2' மூலம் பாலிவுட்டில் அறிமுகமாயிருக்கும் நடிகை ராய் லக்ஷ்மி.
அருள்நிதி :
மாஸ் டீசர். மெர்சக் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் அருள்நிதி.
ஜீவா :
மெர்சல் படத்தின் இயக்குநர் அட்லீக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் நடிகர் ஜீவா மெர்சல் டீசர் ஆசம்' எனத் தெரிவித்திருக்கிறார்.
சிம்ரன் :
மெர்சல் டீசரை ஷேர் செய்து நடிகர் விஜய்க்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் நடிகை சிம்ரன்.
மாடல் நடிகை :
ரிலீஸ் ஆகுறவரைக்கும் காத்திருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார் நடிகையும் பிரபல மாடலுமான சந்திரிகா ரவி.
விஷ்ணு விஷால் :
'வாவ்... புல்லரிக்கிது. செமையா இருக்கு. விஜய் அண்ணா சூப்பர்' என வாழ்த்தியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
சமந்தா :
இவ்வளவு மாஸ் டீசர் எப்படி உருவாக்க முடிஞ்சது... காத்திருப்புக்கு எல்லாம் தகுதியானது இந்த டீசர்.
சிபிராஜ் :
இது சாதனைகளையெல்லாம் தகர்க்கவேண்டிய நேரம் என டீசரைப் பார்த்த சிபிராஜ் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
காஸ்ட்யூம் டிசைனர் :
பிரபல காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் க்ரிஸில்டா, 'இந்த டீசர் பார்க்கும்போதே புல்லரிக்குது. ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவுக்கு வெய்ட் பண்றேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கௌரவ் நாராயணன் :
தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' படங்களின் இயக்குநரும் நடிகருமான கௌரவ் நாராயணன், 'மனதைக் கவரும் டீசர் விஜய் அண்ணா... கேமரா, பி.ஜி.எம் என எல்லாம் சேர்ந்து டோட்டல் மாஸ்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அக்ஷரா கௌடா :
பிரபல பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகை அக்ஷரா கௌடா, 'விஜய் வேஷ்டி சட்டையில் அரங்கிற்குள் நுழைவதைப் பார்க்கும்போதே புல்லரிக்கிறது. மெர்சல் டீசர் பார்த்து மெர்சல் ஆயிட்டேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாந்தனு பாக்யராஜ் :
தெறினா தெனாவெட்டா இருக்கணும்... மெர்சல்னா இப்படி இருக்கணும். ஒவ்வொரு ஃப்ரேம்லயும் விஜய் அண்ணா மாஸா இருக்கார் எனக் கூறியுள்ளார் நடிகர் சாந்தனு.
நகுல் :
மனதைக் கவரும் டீசர்... படம் ரிலீஸ் ஆகுறவரைக்கும் காத்திருக்க முடியலை எனத் தெரிவித்துள்ளார் நடிகர் நகுல்.
ஜெயம் ரவி :
Power packed #Mersal teaser. Vijay Anna at his best! Congratulations to the entire team & best wishes for a grand success. God bless
விக்ராந்த் :
வேற வேற வேற லெவல்... மெர்சல் தீபாவளி உறுதி... எனக் கூறியுள்ளார் நடிகர் விக்ராந்த்.
ஜி.வி.பிரகாஷ்:
இளையதளபதி ராக்கிங் எனத் தெரிவித்துள்ளார் நடிகரும் விஜய் ரசிகருமான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
தமன் :
'மெர்சல்னா இது உண்மையான மெர்சல். டைட்டிலுக்கு ஏற்ற படம்' எனக் குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் தமன்.


Click it and Unblock the Notifications











