twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உக்ரைன் மீதான ரஷ்யா போர்... போர் குறித்து பிரபலங்கள் உருக்கம்

    |

    சென்னை : உக்ரைன் மீதான போரைத் துவங்கியுள்ளது ரஷ்யா.

    உக்ரைன் மீது கடல்வழி, தரைமார்க்கம் என பலமுனைத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் இந்தப் போரை நிறுத்த வலியுறுத்தில் இந்திய திரைத்துறை பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    முத்தக்காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மன்மத லீலை... ரிலீஸ் தேதி அறிவிப்பு முத்தக்காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மன்மத லீலை... ரிலீஸ் தேதி அறிவிப்பு

    உக்ரைன் மீதான போர்

    உக்ரைன் மீதான போர்

    உக்ரைன் மீது போரைத் துவங்கியுள்ளது ரஷ்யா. கடல்வழி, தரைமார்க்கம் என உக்ரைன் மீது பல்முனைத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றன்மீது நடத்தப்பட்டு வரும் மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    புதின் விளக்கம்

    புதின் விளக்கம்

    கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் பகுதிகளில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்களை உக்ரைன் அரசுப் படையினரிடமிருந்து காக்கும் நோக்கிலேயே ராணுவ நடவடிக்கைகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள்மீது ஏவுகணை தாக்குதல் வான்வழி தாக்குதல் உள்ளிட்டவை உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

    ரஷ்யா -அமெரிக்கா பனிப்போர்

    ரஷ்யா -அமெரிக்கா பனிப்போர்

    இந்தப் போரை ரஷ்யா -உக்ரைன் இடையிலான போராக மட்டும் பார்க்க முடியாது. மாறாக ரஷ்யா -அமெரிக்கா இடையிலான பனிப்போராகவும் வல்லுநர்கள் பார்த்து வருகின்றனர். இந்தப் போரில் ஒருவர் இறங்கி வந்திருந்தாலும் இது தவிர்த்திருக்கக் கூடியதே என்பதும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

    சமந்தா கோரிக்கை

    சமந்தா கோரிக்கை

    இந்நிலையில் இந்தப் போரை நிறுத்த வலியுறுத்தி இந்திய அளவில் திரைத்துரை பிரபலங்கள் சமுக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சமந்தா இந்த உலகத்தில் அமைதி இருக்க வேண்டும், அந்த அமைதி நம் அனைவரின் வீட்டிலும் மனதிலும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். எல்லாரும் நிம்மதியாக இருப்பதற்கு தகுதியானவர்களே என்றும் தெரிவித்துள்ளார்.

    விக்னேஷ் சிவன் கோரிக்கை

    விக்னேஷ் சிவன் கோரிக்கை

    இதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவனும் உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஸ்டாப் வார் இன் உக்ரைன் என்ற பதாகையை தாங்கிய சிறுவன் மற்றும் அவரது தாயின் புகைப்படத்தையும் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தியுள்ளார்.

    பிரார்த்திக்க டிடி கோரிக்கை

    பிரார்த்திக்க டிடி கோரிக்கை

    இதனிடையே உக்ரைனுக்காக அனைவரும் பிரார்த்திப்பதை தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியாது என்று தொகுப்பாளரும் நடிகையுமான டிடி கருத்து தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ரா அப்பாவி மக்கள் அவர்களது வாழ்க்கைக்காகவும் அவர்களின் விருப்பத்திற்குரியவர்களின் வாழ்க்கைக்காகவும் போராடி வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவனும் உலக அமைதிக்காக கோரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Celebrities wants to stop the Russia war against Ukraine
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X