twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விசாகப்பட்டினம் சோகம்.. நெஞ்சை பிழிகிறது.. பிரார்த்திக்கும் பிரபலங்கள்.. டிவிட்டரில் உருக்கம்!

    |

    சென்னை: விசாகப்பட்டினத்தில் நிகழ்ந்த விஷ வாயு கசிவு சம்பவம் குறித்து திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

    Recommended Video

    Major Gas Leak At Andhra Plant

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இன்று அதிகாலை ரசாயண தொழிற்சாலையில் திடீர் வாயு கசிவு ஏற்பட்டது. 3 கிலோ மீட்டர் வரை பரவிய விஷ வாயுவால் ஆயிக்கணக்கான மக்கள் மயங்கி விழுந்தனர்.

    சாலைகளில் சென்றவர்களும் தொப் தொப்பென்று மயங்கி விழுந்தனர். குழந்தை உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதெல்லாம் யார் சொன்னா.. அந்த முடிவுக்கு வாய்ப்பே இல்லை.. இந்தியன் 2 விவகாரம்.. லைகா திட்டவட்டம்!அதெல்லாம் யார் சொன்னா.. அந்த முடிவுக்கு வாய்ப்பே இல்லை.. இந்தியன் 2 விவகாரம்.. லைகா திட்டவட்டம்!

    சினிமா பிரபலங்கள்

    சினிமா பிரபலங்கள்

    ஏற்கனவே கொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில் இந்த விஷ வாயு கசிவு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களின் வேதனையை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தி, தெலுங்கு. தமிழ் சினிமா பிரபலங்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    பிரபலங்கள் டிவிட்

    பிரபலங்கள் டிவிட்

    #PrayForVizag, #VizagGasTragedy, #Vishakapatnam ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாகி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வேண்டும் என சமூக வலை வளைதளங்களில் டிவிட்டி வருகின்றனர்.

    இயக்குநர் ரத்னகுமார்

    இயக்குநர் ரத்னகுமார்

    இயக்குநர் ரத்னகுமார் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
    விசாகப்பட்டினத்தின் சோகப் படங்கள் மற்றும் காட்சிகள் கவலை அளிக்கிறது. இந்த சூழ்நிலைகளில் ஒருவருக்கொருவர் உதவுவது இன்னும் கடினமாக இருக்கும். குறைக்கப்பட்ட மேன் பவரை கொண்டு இயங்கும் அனைத்து நிறுவனங்களும் தயவுசெய்து தங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

    அர்ச்சனா கல்பாத்தி

    அர்ச்சனா கல்பாத்தி

    தயாரிப்பாளரான அர்ச்சான கல்பாத்தி அவரது டிவிட்டர் பக்கத்தில், நமக்கு ஒரு இடைவெளி கொடுக்க 2020 தயாராக இல்லை என்று தெரிகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவருமே முழுமையாக குணமடைவார்கள் என்று நம்புகிறேன், அன்பானவர்களை இழந்தவர்களுக்கு கடவுள் தெம்பு கொடுப்பார் என தெரிவித்துள்ளார்.

    நடிகை பிரணிதா

    நடிகை பிரணிதா

    நடிகை பிரணிதா பதிவிட்டுள்ள டிவிட்டில் விசாகப்பட்டினம் கேஸ் லீக் செய்தி இதயத்தை பிழிந்து விட்டது. கஷ்டப்படுபவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய பிரார்த்தனை.. 2020 - என்னால் பேச முடியவில்லை.. என பதிவிட்டுள்ளார்.

    நடிகர் மாதவன்

    நடிகர் மாதவன்

    நடிகர் மாதவன் பதிவிட்டுள்ள டிவிட்டில் விசாகப்பட்டினம் ஆலையில் எரிவாயு கசிவால் 8 பேர் பலியாகி இருக்கிறார்கள். 1,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.. இந்த கொடூரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை. நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்

    அர்ஜூன் கபூர்

    அர்ஜூன் கபூர்

    பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் வெளியிட்ட டிவிட்டில்
    விசாகப்பட்டினம் வாயு கசிவின் சோகமான செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் மீண்டு வர எனது பிரார்த்தனைகள்.. பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் என தெரிவித்துள்ளார்.

    நடிகர் சிரஞ்சீவி

    நடிகர் சிரஞ்சீவி

    தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தெலுங்கு மொழியில் டிவிட்டியிருக்கிறார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் லாக்டவுனுக்கு பிறகு தொழிற்சாலைகள் திறக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    காயத்ரி ரகுராம்

    காயத்ரி ரகுராம்

    காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள டிவிட்டில் விசாகப்பட்டினத்தில் எரிவாயு கசிவு பற்றி கேள்விப்பட்டதும் மிகவும் வருத்தமாக இருக்கிறது, மனம் உடைந்து போனது. அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கல். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    சின்மயி

    சின்மயி

    இதேபோல் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடகி சின்மயி, ரஷாமி தேசாய், ஸ்ரீமுகி உள்ளிட்ட பலரும் விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவுக்குறித்து கவலையும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Celebrities saddened for Vizag gas leak. Many hashtags are trending on twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X