சூர்யா பிறந்தநாள் காமன் டிபி வெளியீடு...பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?
சென்னை : நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஜுலை 23 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சூர்யாவின் 47வது பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் துவக்கமாக காமன் டிபி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பிறந்தநாள் சிடிபி சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்த சிடிபி.,யை பிரபலங்கள் பலர் இணைந்து ஒன்றாக வெளியிட்டுள்ளனர்.
அதோடு இந்த சிபிடியை பகிர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யாவிற்கு இப்போதே வாழ்த்து சொல்ல துவங்கி விட்டனர். அதோடு சூர்யாவின் அடுத்த படங்கள் பற்றிய அப்டேட்கள் சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியாகுமா என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிடிபி பற்றி பிரபலங்கள் வெளியிட்ட கருத்துக்கள் இதோ.

கார்த்தி
நல்ல இதயம் கொண்ட ஒரு சிறந்த மனிதரைக் கொண்டாடும். எந்த கேரக்டரையும் ஏற்று நடிக்கும் நடிகர். ரிஸ்க் எடுக்க வெட்கப்படாதவர். அன்பான ரசிகர்களிடமிருந்து அண்ணாவுக்கான பொதுவான டிபியை வெளியிடுப்பட்டுள்ளது.

சுரேஷ் காமாட்சி
தமிழ் சினிமாவின் பெருமையான சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக காமன் டிபி வெளியிடுவதில் மிக மிக மகிழ்ச்சி.

ஜிவி பிரகாஷ் குமார்
அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா சார். இந்த சிடிபி டிசைன் வடிவமைத்தது வியாகி மற்றும் தினகர் ராஜா.

நடிகர் தங்கதுரை
சூர்யா சாரின் பிறந்தநாள் காமன் டிபியை பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.

மமிதா பைஜு
சகோதரர் சூர்யாவின் பிறந்தநாள் சிடிபியை வெளியிடுவதில் மகிழ்ச்சி. எனது அன்பான சகோதரருக்கு எனது அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

டைரக்டர் பாண்டிராஜ்
மிக உன்னதமான மனிதர் சூர்யா சாரின் காமன் டிபியை வெளியிடுவதில் மிகவும் பெருமை மற்றும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.

விஜய டிவி புகழ்
சூர்யா அண்ணாவின் ஆட்டம் ஆரம்பம். வெயிட்டிங். சூர்யா அண்ணாவின் பிறந்தநாள் சிடிபி வெளியிடுவதில் மகிழ்ச்சி

கிருத்தி ஷெட்டி
சூர்யா சாரின் பிறந்தநாள் காமன் டிபியை உங்கள் அனைவருக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி.

டைரக்டர் ராஜசேகர் பாண்டியன்
அன்பான பேன்ஸ் சூர்யாவின் பிறந்தநாள் சிடிபியை வெளியிடுவதில் மகிழ்ச்சி

ஸ்டுடியோ கிரீன்
சூர்யா அண்ணாவின் பிறந்தநாள் சிபிடியை வெளியிடுவதில் மகிழ்ச்சி. அவரது இனி வரும் படங்களுக்கு ஆல் தி பெஸ்ட் அண்ணா. ஸ்டுடியோ க்ரீன் டீம் மற்றும் ஞானவேல்ராஜாவின் அன்புடன்.

நட்டி நடராஜ்
Many many happy returns of the day Suriya Sir. சிடிபி வெளியிடுவதில் மகிழ்ச்சி.


Click it and Unblock the Notifications











