Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கேஜிஎஃப் 2 படம் எப்படி இருக்கு...இவங்க எல்லாம் என்ன சொல்லிருக்காங்க தெரியுமா ?
சென்னை : கேஜிஎஃப் 2 படத்தை பார்த்து விட்டு, ரசிகர்கள், விமர்சகர்கள் என படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபலங்கள் பலரும் கேஜிஎஃப் 2 படத்தை பார்த்து விட்டு தங்களின் கருத்துக்களை சோஷியல் மீடியா மூலம் பதிவு செய்துள்ளனர்.
டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018 ம் ஆண்டு வெளிவந்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது கேஜிஎஃப் 2. இந்த படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீசாகி வசூலை வாரி குவித்துள்ளது. முதல் நாளே மற்ற எல்லா படங்களின் சாதனையையும் முறியடித்துள்ளது. இதுவரை ஒரு நெகடிவ் கமெண்ட்டை கூட இந்த படம் பெறவில்லை என்பது தான் ஹைலைட்டே.
மாஸ்ன்னா இப்படி தான் இருக்கனும் என சொல்லும் அளவிற்கு மாஸ் காட்டி உள்ள கேஜிஎஃப் 2. அதோடு கேஜிஎஃப் 3 வரும் என்று வேறு படத்தின் இறுதியில் சொல்லப்பட்டுள்ளதால் ரசிகர்களின் உற்சாகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் சேர்ந்து கேஜிஎஃப் 2 படம் பற்றிய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அப்படி யாரெல்லாம் என்ன சொல்லியிருக்கிறார் என இங்கே பார்க்கலாம்.
கெத்துகாட்டிய
கே.ஜி.எஃப்
2…
தமிழகத்தில்
திரையரங்குகள்
மற்றும்
காட்சிகள்
அதிகரிப்பு?

சிவகார்த்திகேயன்
யஷ், பிரசாந்த் நீல் மற்றும் ஒட்டுமொத்த கேஜிஎஃப் 2 டீமுக்கும் வாழ்த்துக்கள். கேஜிஎஃப் 2 படம் பிரம்மாண்ட வெற்றி அடைய வாழ்த்துக்கள். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் இன்னும் பல சாதனைகளை படைக்கும்.

மோகன் ஜி ஷத்ரியன்
கேஜிஎஃப் 2, இது பாகுபலியை மிஞ்சிய படம். படக்குழு எப்படி பணியாற்றினார்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. Brilliant, extraordinary, marvellous, fantastic...வேற வேற லெவல் படம்.

குஷ்பு சுந்தர்.சி
பிரசாந்த் நீல், மிகப் பெரிய வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் டீமுக்கும். இப்படியொரு ரெக்கார்ட் பிரேக்கிங் வெற்றி படமாக கேஜிஎஃப் 2 படத்தை கொடுத்ததற்கு. ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் உங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தொழில் நேர்த்தி தெரிகிறது.

அஸ்வினி புனித் ராஜ்குமார்
பிரம்மாண்ட வெற்றியை பெற்ற ஒட்டுமொத்த கேஜிஎஃப் 2 டீமுக்கும் வாழ்த்துக்கள். கன்னட திரைத்துறையை தாண்டி உலகமே இந்த படத்தை கொண்டாடுகிறது. அனைவரின் கண்களையும் ஆச்சரியத்தில் திறந்து பார்க்க வைத்து விட்டீர்கள்

டைரக்டர் கோபிசந்த் மலினேனி
கேஜிஎஃப் 2, பக்கா மாஸ் மசாலா ஃபீஸ்ட். பிரசாந்த் நீல் படத்தை எடுத்துள்ள விதம் Extraordinary. யஷ், ராக்கி பாயாக அசத்தி உள்ளார். மிகப் பெரிய வெற்றி பெற ஒட்டுமொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள்.

லோகேஷ் கனகராஜ்
ஒட்டுமொத்த கேஜிஎஃப் 2 டீமுக்கும் வாழ்த்துக்கள். பிரசாந்த் நீல் சார், உங்க வேலைக்கு நான் மிகப் பெரிய ஃபேன். அன்பறிவு மாஸ்டர்ஸ்க்கு வாழ்த்துக்கள். மற்றொரு மைல்கல்லை எட்டுவதற்கு எனது வாழ்த்துக்கள்.

அஜய் ஞானமுத்து
கேஜிஎஃப் 2, மைண்ட் ப்ளோயிங். திரையில் பார்த்த போது ஒட்டுமொத்த டீமின் உழைப்பையும் பார்த்து அசந்து போய் விட்டேன். மிகுந்த ஆர்வத்துடன் ஒட்டுமொத்த டீமும் கடினமாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. பிரம்மாண்ட வெற்றியை பெற வாழ்த்துக்கள்.

கார்த்திகேயா
சூப்பர் ஹிட்களை விட பெரியது. பிளாக் பஸ்டர், ரெக்கார்டு, உலகை ஆளும் ஆளுமை திறன் கொண்டது கேஜிஎஃப் 2. ஆளுமைக்கு ஒரு ஊக்கசக்தி. யஷ், உங்களை யாராலும் தடுக்க முடியாது. பிரசாந்த் நீல் சார், இந்த உலகிற்கு உங்களின் வெறித்தனம் தேவை. கேஜிஎஃப் டீமுக்கு என்னுடைய சல்யூட். என்ட் டைட்டிலை மிஸ் பண்ணிடாதீங்க.
Recommended Video

மாதவன்
யஷ், வாழ்த்துக்கள் பிரதர். உங்களை நினைத்தால் பெருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. கேஜிஎஃப் 2 படம் பற்றி அற்புதமான விமர்சனங்களை கேட்க முடிகிறது. ராக் இட். ஒட்டு மொத்த டீமுக்கும் மிகப்பெரிய சூப்பர் ஹக்.