'சினிமாக்காரங்கனா இளிச்சவாயங்களா..?" - பொங்கி எழுந்த விக்னேஷ் சிவன்!

By Vignesh Selvaraj

Recommended Video

சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகள்.. கொதித்தெழுந்த ரசிகர்கள்..

சென்னை : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யா அடுத்ததாக இயக்குநர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் அடித்தது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

கே.வி.ஆனந்த் டைரக்‌ஷன்

கே.வி.ஆனந்த் டைரக்‌ஷன்

'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளியானதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. அதற்குப் பிறகு நடிக்கவிருக்கும் சூர்யாவின் 37-வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்க இருப்பது உறுதியாகி உள்ளது.

'சூர்யா 37' படத்தில் அமிதாப்

'சூர்யா 37' படத்தில் அமிதாப்

'சூர்யா 37' படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் தகவல்கள் வெளியாகின.

உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகள்

உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகள்

இதை வைத்து பிரபல தொலைக்காட்சியில் கிசுகிசு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளனர். "அனுஷ்காவுக்காவது ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு... அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும்" என உயரத்தை கிண்டல் செய்துள்ளனர்.

உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்

உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்

இந்த நிகழ்வு சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சூர்யா 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா பேசும் வசனத்தைக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இளிச்சவாயன்கள்னு நினைச்சிட்டாங்க

இந்நிலையில், டைரக்டர் விக்னேஷ் சிவன், "இப்போ எல்லாம் திரைத் துறையினரை எல்லோருக்கும் இளிச்சவாயன்களாக நினைச்சிட்டாங்க. அவ்வளவு மரியாதைக்குரிய மனிதருக்கு சுத்தமா மரியாதையே கொடுக்கல" என வருந்தியுள்ளார்.

ஒரு படத்தில் நடிச்சி பாருங்க

ஒரு சிறந்த நடிகரைப் பற்றி கமென்ட் அடிக்கிறதுக்கு இந்த சோ கால்ட் விஜேக்களுக்கு தகுதி இல்லை. முதலில் ஒரு படத்தில் நடிச்சிட்டு அப்புறமா ஒரு நடிகரை பத்தி கமென்ட் அடிங்க" என கோபமாக ட்வீட் செய்துள்ளார் 'இப்படை வெல்லும்', 'தூங்காநகரம்' படங்களின் இயக்குநர் கௌரவ் நாராயணன்.

முட்டாள்தனமா நடத்தாதீங்க

"உங்களுக்கு ஒரு நிகழ்ச்சிய நடத்த தகுதி இல்லைன்னா, ப்ளீஸ் இப்படி முட்டாள்தனமா நடத்தாதீங்க" என கண்டித்துள்ளார் நடிகர் கருணாகரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X