»   »  "மருத்துவ முத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டும்!".. ட்விட்டரில் கொதிக்கும் திரைப் பிரபலங்கள்!

"மருத்துவ முத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டும்!".. ட்விட்டரில் கொதிக்கும் திரைப் பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நீட் தேர்வு அறிமுகம் செய்ததில் இருந்து தமிழ்நாட்டில் நிறைய எதிர்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. கிராமப்புற மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், இந்த முடிவில் இருந்து மத்திய அரசும், மாநில அரசும் முன்னுக்குப் பின் முரணாகிப் பேசிவந்தன. இந்த நிலையில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது.

இந்த நிலையில் +2-வில் 1176 மதிப்பெண்கள் வாங்கியும் மருத்துவ சீட் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் தற்கொலை செய்திருக்கிறார் அரியலூரைச் சேர்ந்த அனிதா. இதனை அறிந்த பிரபலங்கள் பலரும் தங்களது கோபத்தை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

வரலெட்சுமி சரத்குமார் :

இந்த மாதிரியான தற்கொலையைத் தூண்டும் கல்வி முறை நமக்கு கட்டாயம் தேவையா?

பாடலாசிரியர் விவேகா :

'மருத்துவ முத்தம்' இருக்கட்டும் இந்த மருத்துவ யுத்தத்தையும் கவனிப்போம்.

சி.எஸ்.அமுதன் :

இந்த மரணம் மிகவும் சோகமானது; நமக்குக் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனென்றால், நாம் அனைவரும் அனிதாவின் ரத்தத்தைக் கைகளில் கொண்டவர்கள்.

செல்வராகவன் :

#RIPAnitha என்னை நம்புங்க... வாழ்க்கை பல வாய்ப்புகளைத் தரும்; எதிலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதை நான் பலவருடங்களுக்கு முன்பே புரிந்துகொண்டேன். தற்கொலைகள் தீர்வல்ல.

பாடலாசிரியர் விவேக் :

நீங்க குடுக்காத Dr பட்டத்த நாங்க குடுப்போம் டா அவளுக்கு.. வறுமயை, அது கொடுக்குற வலியை, அதை மீற நெனக்கிறவங்க உழைப்ப உணராதவனுக்கான செருப்படி இது.

ஶ்ரீதிவ்யா :

'நீட் எனும் பெயரால் ஒரு திறமையான மாணவி சாகடிக்கப்பட்டிருக்கிறார்.'

திவ்யதர்ஷினி :

நீ படித்த புத்தகங்கள் வாழ்க்கைப் போராட்டத்தைச் சந்திக்கக் கற்றுக்கொடுக்கவில்லையா?

இயக்குநர் கார்த்திக் நரேன் :

17 வயது பெண்ணின் கனவுகளைக் கொல்வது மிகப் பெரிய பாவம்.

மோகன் ராஜா :

இது ஒரு கருப்பு நாள்!

வெங்கட்பிரபு :

கேட்கவே மிகவும் ஆழ்ந்த வேதனையாக இருக்கிறது.

இசையமைப்பாளர் டி.இமான் :

இன்னும் நிறைய அனிதாக்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களைக் காக்க நமது கல்விமுறையை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இது.

வைரமுத்து :

‘அடி பாவி மகளே' என்று நெஞ்சு பதறுகிறது.
அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும்
ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன.

கஸ்தூரி :

கண்ணீரில் நனைந்திருக்கும் பக்ரீத் வாழ்த்து.

கபிலன் வைரமுத்து :

அடிப்படை உரிமைகளைக் கூட வீதிக்கு வந்து போராடித்தான் பெறவேண்டும் என்ற சூழலுக்கு பெயர் ஜனநாயகம் அல்ல. போர்க்களம்.

நிக்கி கல்ராணி :

ஒரு அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கை இப்படித்தான் முடியணுமா?

Read more about: anitha, twitter, அனிதா
English summary
Celebrities posts tweet against NEET exam. They pay condolences to anitha's death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil