For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கமல், அஞ்சலி, லட்சுமிமேனன், அமலாபால்... அப்ப என்ன சொன்னீங்க, இப்ப என்ன செய்றீங்க?

  |

  சென்னை: முதலில் ஒன்றைக் கூறுவதும், பின்னர் அப்படியே உல்டாவாக மாற்றி பேசுவதுமான சந்தர்ப்பங்கள் சில திரைப் பிரபலங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்து விடுகிறது.

  பொதுவாக திரையுலக பிரபலங்களின் நடிப்பைத் தாண்டி அவர்களது சொந்த விஷயத்திலும் நம்மவர்களுக்கு ஆர்வம் ஜாஸ்தி. எனவே அவர்களது முரண்பட்ட கருத்துக்களால் சமயங்களில் மக்கள் குழம்பிப் போய் விடுகிறார்கள்.

  அந்தவகையில் சமீபத்தில் தங்களது முந்தைய கால கருத்துக்களை, அதாவது தங்களது வார்த்தைகளை அல்லது உறுதி மொழிகளை என மாற்றி தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் சில பிரவலங்களைப் பற்றிய தொகுப்பு இது....

  லட்சுமி மேனன்...

  லட்சுமி மேனன்...

  குடும்ப குத்துவிளக்காக பாந்தமாக சேலை, தாவணி உடுத்தி சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் லட்சுமிமேனன். அப்போது கவர்ச்சியாக நடிப்பீர்களா என அவரிடம் கேட்கப் பட்ட கேள்வி ஒன்றிற்கு, ‘நான் பள்ளி மாணவி. இன்னமும் வகுப்பிற்கு செல்லாவிட்டால் ஆசிரியர்களின் தண்டனைக்கு ஆளாகிறேன். அதனால் என் ஆசிரியர்கள் முன்னிலையில் எவ்வளவு பாந்தமாக நிற்பேனோ அதே மாதிரியே கண்ணியமாக நடிப்பேன்' எனத் தெரிவித்திருந்தார்.

  முத்தக்காட்சிக்கு ஓகே....

  முத்தக்காட்சிக்கு ஓகே....

  ஆனால், முதன்முறையாக நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளார் லட்சுமிமேனன். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமீபத்தில் கருத்துத் தெரிவித்த லட்சுமிமேனன், ‘கதைக்கு தேவைப்பட்டால் இவ்வாறு நடிப்பதில் தவறில்லையே... நடிப்பை நடிப்பாக மட்டும் பாருங்கள்' எனக் கூறியுள்ளார்.

   அடுத்ததாக கமல்ஜி...

  அடுத்ததாக கமல்ஜி...

  தனது விஸ்வரூபம் படம் பிரச்சினையில் சிக்கிய போது செய்தியாளர்களைச் சந்தித்த உலக நாயகன் கமல், ‘நான் நாட்டை விட்டுச் சென்று விடுவேன்' எனத் தெரிவித்தார்.

  இந்தியன் என்று சொல்லடா....

  இந்தியன் என்று சொல்லடா....

  ஆனால், சமீபத்தில் பத்மபூசன் விருது பெற்ற கமல், ‘இனி எதிர்காலத்தில் ஒருபோதும் நான் இந்த நாட்டை விட்டு செல்ல மாட்டேன். இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்' எனக் கூறியுள்ளார்.

  என் குடும்பம் தான் எல்லாம்...

  என் குடும்பம் தான் எல்லாம்...

  அதேபோல், நடிகை அஞ்சலியும் முன்பொரு முறை அளித்த பேட்டியில், ‘என் வளார்ச்சிக்கு என் குடும்பம் பெரும் சப்போர்ட்டாக இருந்தது. என் வெற்றிக்கு காரணமே என் குடும்பம் தான்' என புகழ்ந்து தள்ளினார்.

  கொடுமைப் படுத்துறாங்கப்பா....

  கொடுமைப் படுத்துறாங்கப்பா....

  ஆனால், சமீபத்தில் தன்னுடன் வருவது தன் தாயல்ல, தனது சித்தி என அதிரடி குண்டை எடுத்து வீசிய அஞ்சலி, 'தனித்து வாழ விரும்புகிறேன். என் குடும்பத்துடன் செல்ல விருப்பமில்லை. என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகளை நானே எடுப்பேன்' எனத் தெரிவித்தார்.

  முதலில் நண்பர்கள்...

  முதலில் நண்பர்கள்...

  முதலில் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வதும், பின்னர் ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம் என ஒத்துக் கொள்வதும் திரை உலகில் சகஜம் தான். அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர்கள் இயக்குநர் விஜய்-அமலா பால் ஜோடி.

  அதெல்லாம் வதந்தி...

  அதெல்லாம் வதந்தி...

  இயக்குநர் விஜயின் தெய்வமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அமலாபால். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே காதல் பூத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இருவருமே அதனை மறுத்தார்கள்.

  பெஸ்ட் பிரண்ட்ஸ்...

  பெஸ்ட் பிரண்ட்ஸ்...

  எனக்கும், அமலா பாலுக்கும் ஒருமித்த கருத்துக்கள் இருப்பது உண்மை தான், ஆனால் காதலிக்கவில்லை என இயக்குநர் விஜயும், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என அமலாபாலும் தெரிவித்திருந்தனர்.

  அம்பலமான காதல்...

  அம்பலமான காதல்...

  ஆனால், சமீபத்திய படவிழா ஒன்ரில் இயக்குநர் ஒருவர் அவர்களது காதலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமண வேலைகள் தடபுடலாக நடப்பதாக செய்திகள் வெளியானது.

  விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

  விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

  உடனடியாக அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அமலா பால். அதில், திருமணத் தகவலை மறுக்காத அவர், விஜய் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் எங்களது எதிர்காலம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்' என விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Film celebrities often say that they have been misquoted in the media. But there are times when situations change and makes actors do something quite contrary to what they had said earlier. Here are a few instances when the celebs themselves have contradicted their own statements.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X