»   »  பத்மவிபூஷண் ரஜினிக்கு குவியும் வாழ்த்துகள்!

பத்மவிபூஷண் ரஜினிக்கு குவியும் வாழ்த்துகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பத்ம விபூஷண் விருது பெறவிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலக, அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினைப் பெரும் முதல் தமிழ் நடிகர் ரஜினிதான்.

120 கோடி மக்களின் சார்பில் வழங்கப்படும் இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்துள்ள ரஜினிகாந்த், இதற்காக பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

உயரிய விருது பெற்ற ரஜினிக்கு பலதரப்பிலும் வாழ்த்துகள் குவிகின்றன.

சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரஜினிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். போனிலும் அவர் ரஜினியுடன் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். வாழ்த்துக்கு நன்றி கூறினார் ரஜினி.

முக ஸ்டாலின்

திமுக பொருளாளர் முக ஸ்டாலின் ரஜினிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவருக்கு ட்விட்டரில் ரஜினி நன்றி தெரிவித்தார்.

குஷ்பு

நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பு ட்விட்டரில் ரஜினியை வாழ்த்தினார். இந்த விருதுக்கு நீங்கள் தகுதியானவர் தலைவா என்று அவர் கூறியுள்ளார். அதற்கு ரஜினியும் நன்றி தெரிவித்துள்ளார்.

நயன்தாரா

'ஒன் அண்ட் ஒன்லி தலைவருக்கு பத்மவிபூஷண் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள்தான் அதற்கு தகுதியானவர் தலைவா' - இது நயன்தாராவின் வாழ்த்து.

லட்சுமி மேனன்

'வாவ்.. இதுதான் ஆசீர்வதிக்கப்பட்ட உண்மையான பெருமை தலைவா.. நீங்கள் எதிர்காலத்தில் இன்னும் நிறைய விருதுகள் பெறவேண்டும்.' - நடிகை லட்சுமி மேனன் இப்படி வாழ்த்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

தலைவர் ரஜினிக்கு பத்மவிபூஷண்... என்றும் அவரது ரசிகன் என்பதில் பெருமை.

சசிகுமார்

பத்மவிபூஷண் விருது பெற்றிருக்கும் இந்தியாவின் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள்.

தனுஷ்

தலைவருக்கு பத்மவிபூஷண்... சூப்பர்.. பெருமையாக உள்ளது. இதைவிட பெரிய சந்தோஷமில்லை - தனுஷ்

சீனுராமசாமி

தமிழ் சினிமாவின் தர்மதுரைக்கு வாழ்த்துகள் - இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

நடிகை தன்ஷிகா

எளிமையும் மனிதநேயமும் கொண்ட தலைவருக்கு இந்த விருது மிகப் பொருத்தமானது.. மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

ஐஸ்வர்யா தனுஷ்

பத்மவிபூஷண் ரஜினிகாந்த்... சூப்பர், பெருமைக்குரிய மகள்.

சௌந்தர்யா ரஜினி

பெருமைக்குரிய மகள் நான். அப்பா இப்போது பத்மவிபூஷண்.

English summary
Film celebrities and political leaders wishing Rajinikanth for getting the highest civilian award Padmavibhushan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil