»   »  வாழ்த்து மழையில் மூழ்கித் திளைக்கும் சமந்தா! #ChaySamWedding

வாழ்த்து மழையில் மூழ்கித் திளைக்கும் சமந்தா! #ChaySamWedding

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவா : கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இந்து முறைப்படி, நடிகை சமந்தா - தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது. காதலர்களான நாக சைதன்யாவும் சமந்தாவும் நேற்று சுற்றத்தினர் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.

நேற்று இந்து முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 200 பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டார்கள். இன்று கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது.

திரையுலகினர் பங்கேற்பதற்காக அக்டோபர் மாத இறுதியில் ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சமந்தா திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

த்ரிஷா வாழ்த்து

'உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்... தேவதைக் கதைகளின் மீதான என் நம்பிக்கையை மீண்டும் நிறுவியதற்கு நன்றி.' என வாழ்த்துத் தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா.

ஸ்ருதிஹாசன் வாழ்த்து

'வாழ்நாள் முழுமைக்குமான மகிழ்ச்சிக்கு வாழ்த்துகள்... காட் பிளஸ் யூ' என மணமக்களை வாழ்த்தியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

கீர்த்தி கர்பந்தா வாழ்த்து

'உண்மையான அன்பே எப்போதும் நீடித்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்! வாழ்த்துகள்' என வாழ்த்தியுள்ளார் நடிகஇ கீர்த்தி கர்பந்தா.

நாணி வாழ்த்து

சமந்தா - நாக சைதன்யா இருவருக்கும் அழகான வாழ்வு அமைய வாழ்த்துகள். கார்த்திக்கும் ஜெஸ்ஸிக்கும் காதலில் எண்ட் கார்டு போட்டுட்டு கல்யாணத்துக்குப் போயாச்சு.

மனோஜ் மஞ்சு

எப்போதும் இணைந்திருங்கள். இந்த ஆச்சரியமான ஜோடிக்கு ஆசிர்வாதமும், மகிழ்ச்சியும் திருமண வாழ்வில் கிடைக்கப்பெற வாழ்த்துகள்! என நடிகர் மனோஜ் மஞ்சு வாழ்த்தியுள்ளார்.

தமன்னா வாழ்த்து

'மிக மகிழ்ச்சியான் திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துகள். நான் அறிந்த அருமையான மனிதர்கள் நீங்கள் இருவரும்' என நடிகை தமன்னா வாழ்த்தியுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்

மிக ஆச்சரியமான காதல் ஜோடிக்கு வாழ்த்துகள். உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி எப்ப்போதும், எங்கேயும் கிடைக்க வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

டாப்ஸி

வாழ்த்துகள் சமந்தா... இங்கேதான் உங்களது அழகான வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது. உங்களது புன்னகையுடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகை டாப்ஸி.

மகேஷ்பாபு

அன்பான ஜோடிக்கு மண வாழ்த்துகள். உங்கள் வாழ்வு ஒளியாலும், காதலாலும், மகிழ்ச்சியாலும் நிறைந்திருக்க வேண்டுகிறேன்' எனக் கூறியுள்ளார் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு.

English summary
Actress Samantha - Naga Chaitanya married at Goa Star Hotel. The reception is to be held in Hyderabad at the end of October to participate cinebrities. In this case, the wedding of Samantha are celebrated by the actors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil