For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சூரிக்கு இன்று பிறந்தநாள்.. சமூகவலைத்தளங்களில் தெறிக்கும் வாழ்த்து செய்தி!

  |

  சென்னை : நடிகர் சூரி இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக பலராலும் அறியப்பட்டார்.

  மாற்றுத்திறனாளி & திருநங்கைகளுக்கு உதவிய சூரி | Actor Soori

  திரைத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்காமல் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் முகத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்டி நடித்து வந்த சூரி தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

  யதார்த்தமான கிராமத்து வாசனையுடன் தனித்துவமான வாய்ஸ் மாடுலேஷனில் இன்று வரை காமெடியில் அசத்தி வரும் சூரி ஆகஸ்ட் 27 ஆம் தேதியான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பல்வேறு திரைப்பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  மனைவி விவகாரத்தில் தொடர்ந்து மிரட்டல்.. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது தாடி பாலாஜி மீண்டும் புகார்!

  சரியான வாய்ப்பை எதிர்நோக்கி

  சரியான வாய்ப்பை எதிர்நோக்கி

  மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட சூரி சினிமாவின் மீது கொண்ட காதலால் வின்னர், பீமா, தீபாவளி உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தலையை காட்டி சென்ற இவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக சரியான அங்கீகாரம் ஏதும் கிடைக்காமல் தனக்கான சரியான வாய்ப்பை எதிர்நோக்கி தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார்.

  பரோட்டா சூரி

  பரோட்டா சூரி

  இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்குனராக அறிமுகமான "வெண்ணிலா கபடிகுழு" திரைப்படத்தில்" பரோட்டா சூரி" என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் அறிமுகமானார். வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் இடம்பெறும் பரோட்டா காமெடி இன்றுவரை மிகப் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிலையில் சூரியை பலரும் இன்று வரை இவரை "பரோட்டா சூரி" என்ற அடைமொழியை வைத்தே அழைத்து வருகின்றனர்.

  மக்கள் மனதில்

  மக்கள் மனதில்

  பரோட்டா சூரி என்ற பெயர் மக்கள் மனதில் ஆழமாக பதிந்த பின் சூரி நடித்த திரைப்படத்தில் எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனித்துவமான காமெடி நடிகராக வலம் வரத் தொடங்கினார். வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்திற்கு பிறகு நான் மகான் அல்ல, களவாணி, குள்ளநரிக்கூட்டம், வேலாயுதம் உள்ளிட்ட பிரபலமான பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த சூரிக்கு "போராளி" திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த காமெடியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

  காமெடி கொஞ்சம் தூக்கலாகவே

  காமெடி கொஞ்சம் தூக்கலாகவே

  நடிகர் சூரி பல்வேறு ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் திரைப்படங்களில் எப்பொழுதுமே காமெடி ஒரு பங்கு தூக்கலாகவே இருக்கும். இயல்பாகவே காமெடியில் கலக்கும் சிவகார்த்திகேயன் சூரியுடன் இணையும் போது சொல்லவே தேவையில்லை அந்தப் படம் காமெடி பிளாக்பஸ்டர் தான்.

  காமெடி தர்பார்

  காமெடி தர்பார்

  அந்த அளவுக்கு சூரி, சிவகார்த்திகேயன் காம்போ மிகப் பிரபலமாக பேசப்பட்ட நிலையில் மனம் கொத்திப் பறவை திரைப்படத்தில் இணைந்த இவர்களின் கூட்டணி கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், சீமராஜா மற்றும் சமீபத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை என இவர்களின் காமெடி தர்பார் கூட்டணி இன்று வரை தொடர்ந்து வருகிறது.

  இதேநாளில் மற்றொரு ஒற்றுமையும்

  இதேநாளில் மற்றொரு ஒற்றுமையும்

  இவ்வாறு திரைப்படங்களில் இவர்கள் இணையும் காமெடி மிகப் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிலையில், நிஜத்திலும் இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என சகோதரர்களாகவே பழகி வருகின்ற அதேசமயம் இவர்கள் இருவருக்கும் மற்றொரு ஒற்றுமையும் உள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று சூரி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், இதேநாளில் சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதியும் இன்று திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

  கதாநாயகனாக நடிக்கிறார்

  கதாநாயகனாக நடிக்கிறார்

  பார்க்க ஒரு சாயலில் நடிகர் வடிவேலுவை பிரதிபலிப்பது போலவே காட்சியளிக்கும் சூரி, கிராமத்து மண் வாசனை கலந்த காமெடி பேச்சின் மூலம் ரசிகர்களை இன்றுவரை கவர்ந்து வருவதோடு தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து இயக்கும் திரைப்படம் ஒன்றில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் என்ற அட்டகாசமான தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

  43வது பிறந்தநாள்

  43வது பிறந்தநாள்

  தமிழ் ரசிகர்களுக்கு தனது வெள்ளந்தியான காமெடியின் மூலம் தொடர்ந்து ரசிக்க வைத்து வரும் சூரி ஆகஸ்ட் 27 ஆம் தேதியான இன்று தனது 43வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடி வருவதையொட்டி தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வரும் நிலையில் இவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  English summary
  Celebrities wishes to comedian Soori on his 43rd Birthday Today
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X