»   »  நட்சத்திரக் கிரிக்கெட்: 8 அணிகளின் நடிக,நடிகையர் விவரம்

நட்சத்திரக் கிரிக்கெட்: 8 அணிகளின் நடிக,நடிகையர் விவரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில், 8 அணியிலும் விளையாடப் போகும் வீரர்களின் விவரங்கள், தற்போது வெளியாகியுள்ளன.

நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றது. சுமார் 8 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டியில் 8 அணிகளின் கேப்டன் மற்றும் அணிகளின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

Celebrity Cricket: Players Name now Revealed

மேலும் 6 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில் எந்த அணிக்கு யார் கேப்டன்? போன்ற விவரங்களையும் நேற்று அறிவித்து விட்டனர். இந்நிலையில் எந்த அணியில் யார் விளையாடப் போகிறார்கள் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.மேலும் ஒவ்வொரு அணிக்கும் விளம்பரத் தூதர்களாக முன்னணி நடிகைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் அஜீத், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சிங்கம்ஸ்

நடிகர்கள்: சூர்யா (கேப்டன்),விக்ராந்த், சிவா, உதய், நந்தா, அருண் விஜய், அர்ஜுன்.

நடிகைகள்: ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கௌரி முங்கல், திவ்யா, ருக்மணி.

மதுரை காளைஸ்

நடிகர்கள்: விஷால்(கேப்டன்), ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலிகான்.

நடிகைகள்: வரலட்சுமி, ஜனனி ஐயர், நிகில் கல்ராணி, சாந்தினி, மதுமிதா.

கோவை கிங்ஸ்

நடிகர்கள்: கார்த்தி(கேப்டன்), பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே.ரித்திஷ், பிரசாந்த்.

நடிகைகள்: தமன்னா, மது ஷாலினி, சிருஷ்டி டாங்கே, மும்தாஸ் மிஸா, அபிநயஸ்ரீ.

நெல்லை ட்ராகன்ஸ்

நடிகர்கள்: ஜெயம் ரவி(கேப்டன்), அரவிந்த்சாமி, விஜய் வசந்த், சவுந்தர் ராஜா, பிருத்வி, அஸ்வின் சேகர், வைபவ்.

நடிகைகள்: ஸ்ரீதிவ்யா, நமீதா, மனிஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி நாயர்.

ராம்நாடு ரைனோஸ்

நடிகர்கள்: விஜய் சேதுபதி(கேப்டன்), ஜெய், கலையரசன், போஸ் வெங்கட், வருண் ஐசரி கணேஷ், சக்தி, அருண்பாலாஜி.

நடிகைகள்: ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா.

தஞ்சை வாரியர்ஸ்

நடிகர்கள்: ஜீவா (கேப்டன்), லக்‌ஷ்மண், அசோக், ஷரண், பசுபதி, அதர்வா, பிளாக் பாண்டி.

நடிகைகள்: அமலாபால், தன்ஷிகா, நிகிஷா பட்டேல், ஃப்ளோரா ஷைனி, சஞ்சனா சிங்.

திருச்சி டைகர்ஸ்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன் (கேப்டன்), ஷாம், விக்ரம் பிரபு, அசோக் செல்வன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், ஹேமச்சந்திரன்.

நடிகைகள்: கீர்த்தி சுரேஷ், சாயா சிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா.

சேலம் சீட்டாஸ்

நடிகர்கள்: ஆர்யா(கேப்டன்), கார்த்திக் முத்துராமன்,ஆதவ், உதயநிதி,உதயா,ஜித்தன் ரமேஷ்,செந்தில்.

நடிகைகள்: பிந்து மாதவி, நந்திதா, பூனம் கவுர், ரகசியா, சுஜா வரூனி.

சிவா, குஷ்பூ இருவரும் இப்போட்டியை தொகுத்து வழங்குவார்கள் என்று எதிரபார்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சிங்கம்ஸ் டீமிற்காக சிவா களமிறங்கி விட்டார்.

இதனால் இப்போட்டியை தொகுத்து வழங்கப் போவது யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

English summary
Nadigar Sangam: Now Players Name Revealed for Star Cricket.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil