»   »  கேளுங்க மக்களே... ஆர்யாவின் திருமணம் சமுதாயத்துக்கு நல்லதாம்.. விஷால் சொல்றாரு!

கேளுங்க மக்களே... ஆர்யாவின் திருமணம் சமுதாயத்துக்கு நல்லதாம்.. விஷால் சொல்றாரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யாவிற்கு திருமணம் நடந்தால் அது இந்த சமுதாயத்துக்கு நல்லது என்று ஆர்யாவை கலாய்க்க செய்திருக்கிறார் விஷால்.

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சில வாரங்களாக முன்னோட்ட நிகழ்ச்சிகளை சன்டிவி ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில் நேற்று நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் 8 அணிகளையும் அறிமுகம் செய்து வைக்கும் விழா நடைபெற்றது.

இதில் ஒருசில நட்சத்திரங்கள் தவிர மற்ற அனைவருமே கலந்து கொண்டனர்.

நட்சத்திரக் கிரிக்கெட்

நட்சத்திரக் கிரிக்கெட்

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர்கள் ஒன்றிணைந்து, நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றனர். வருகின்ற 17 ம் தேதி இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இப்போட்டிக்கான முன்னோட்ட நிகழ்ச்சிகளை சன் டிவி ஒளிபரப்பி வருகிறது.

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு

நேற்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இப்போட்டிக்கான 8 அணிகளையும் அறிமுகம் செய்து வைத்தனர். மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சிவா, குஷ்பூ இருவரும் தொகுத்து வழங்கினர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு பாடல் என ஐபிஎல் ரேஞ்சுக்கு அணியினரை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

சிங்கம் சிங்கம்

சிங்கம் சிங்கம்

'சிங்கம் சிங்கம்' பாடலுடன் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியினர் அறிமுகமாகினர். ஒவ்வொரு அணி கேப்டனிடமும் இதுவரை யாரும் கேட்காத ஒரு கேள்வியை மற்ற கேப்டன்கள் கேட்கலாம் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளரான சிவா கூறியிருந்தார். சூர்யாவிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு ஜீவாவுக்கு கிடைத்தது. உங்களின் 24 படம் எப்போது வெளியாகும்? என்று ஜீவா கேட்க அதற்கு சூர்யா 'மே முதல் வாரத்தில் இருக்கலாம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்' எனக் கூறினார்.

மதுரை காளைஸ்

மதுரை காளைஸ்

இதுபோல விஷாலின் மதுரை காளைஸ் அறிமுகமாகும் போது ஆர்யாவின் திருமணம் எப்போது நடக்கும்? என கார்த்தி விஷாலிடம் கேட்டார். அதற்கு விஷால் 'ஆர்யாவின் திருமணம் நடந்தால் இந்த சமுதாயத்துக்கு நல்லது. கிசுகிசுவின் ராஜாவாக அவன் வலம்வருகிறான் விரைவில் அவனுக்கு திருமணம் நடைபெறும்' என்று பதில் கூறினார்.தொடர்ந்து மற்ற அணிகளின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்னும் 2 நாட்களில் நடைபெறப் போகும் இந்தப் போட்டியில், மற்ற மாநில நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள் என நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.

English summary
Celebrity Cricket: Teams Introduction Programme Yeterday Held in Sun TV.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil