»   »  சினிமாக்காரங்க பார்ட்டின்னா தண்ணியடிச்சுட்டு கிசுகிசுப்பாங்க: நடிகர் பரபர பேட்டி

சினிமாக்காரங்க பார்ட்டின்னா தண்ணியடிச்சுட்டு கிசுகிசுப்பாங்க: நடிகர் பரபர பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
சினிமாக்காரங்க பார்ட்டி ஜூனியர் என்டிஆருக்கு வந்த வாழ்வு

மும்பை: பாலிவுட்காரர்கள் கொடுக்கும் பார்ட்டிகளில் மது அருந்திவிட்டு, கிசுகிசுப்பார்கள் என்று நடிகர் சன்னி தியோல் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் அடிக்கடி பார்ட்டி கொடுப்பதற்கு பெயர் போனவர்கள். அவர்களின் பார்ட்டிகளில் மது விருந்து நடப்பதும் அனைவரும் அறிந்ததே.

அந்த பார்ட்டிகளில் கலந்து கொள்ளாத நடிகர் சன்னி தியோல் பேட்டியில் கூறியிருப்பதாவது,

பார்ட்டிகள்

பார்ட்டிகள்

என்னை பிரபலங்கள் பார்ட்டிகளுக்கு அழைத்த அந்த நாட்கள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் அந்த பார்ட்டிகளுக்கு செல்லவில்லை. அதனால் அவர்கள் கோபம் அடைந்தனர்.

திமிர்

திமிர்

பெரிய திமிர் பிடித்தவனாக இருப்பான் போல். பார்ட்டிகளுக்கு அழைத்தால் வர மாட்டேங்கிறான் என்றார்கள். பின்னர் நான் பார்ட்டிகளுக்கு வரும் ஆள் இல்லை என்பதை அவர்கள் மெதுவாக புரிந்து கொண்டனர்.

மது

மது

எனக்கு திமிர் எல்லாம் இல்லை. நான் கூச்ச சுபாவம் உள்ளவன். பட பார்ட்டிகளாகட்டும், இல்லை பிற பார்ட்டிகளாகட்டும் மது அருந்திவிட்டு கிசுகிசுப்பார்கள். அது எனக்கு சரிபட்டு வராது.

விருது விழாக்கள்

விருது விழாக்கள்

விருது விழாக்களில் விருதுகள் எப்படி கொடுப்பார்கள்? பாலிவுட்டிலோ எனக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும், இந்த விருதை கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் வருவேன் என்பார்கள் என்றார் சன்னி தியோல்.

English summary
Actor Sunny Deol said that celebs drink liquor and gossip in Bollywood parties.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil