twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு தந்தையாக இதயம் வலியால் கதறுகிறது: கமல், பிரகாஷ் ராஜ் குமுறல்

    By Siva
    |

    Recommended Video

    சிறுமி ஆசிபா பலாத்காரம், கமல், பிரகாஷ் ராஜ் குமுறல் #JusticeforAsifa

    சென்னை: 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கமல் ஹாஸன் தனது கோபம், வேதனை, வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஒருவர் கடத்தி கோவிலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு போதை மருந்து கொடுத்து சீரழித்துள்ளனர்.

    சிறுமிக்கு நடந்த கொடூரத்தை பார்க்கும்போது நிர்பயா நம் கண் முன் வந்து செல்கிறார். பொதுமக்களும், பிரபலங்களும் சிறுமிக்கு நீதி கோரி ட்வீட் செய்கிறார்கள்.

    கமல் ஹாஸன்

    இதை புரிந்து கொள்ள நம் சொந்த மகளாக இருக்க வேண்டுமா? அவர் என் மகளாகவும் இருந்திருக்கலாம். ஒரு மனிதனாக, தந்தையாக, குடிமகனாக ஆசிபாவை காப்பாற்ற முடியாமல் போனதற்கு கோபப்படுகிறேன். இந்த நாட்டை உனக்கு பாதுகாப்பானதாக ஆக்காமல் போனதற்கு மன்னித்துவிடு குழந்தாய். உன் போன்ற குழந்தைகளுக்காக நீதி கேட்டு போராடுவேன். உன்னை நினைத்து வருந்துகிறோம், உன்னை மறக்க மாட்டோம் என்று கமல் ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    ரஹ்மான்

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்காக நீதி கிடைக்க விரும்புவோர் இந்த விண்ணப்பத்தில் கையெழுத்திடவும்.

    அனுஷ்கா சர்மா

    அப்பாவி குழந்தையை கொடுமைப்படுத்துவது மிகவும் கொடூரமானது. நாம் வாழும் உலகிற்கு என்ன ஆனது? அவர்களுக்கு இருப்பதிலேயே கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மனிதமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம். அதிர்ந்து போயுள்ளேன் என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா குமுறியுள்ளார்.

    குற்றம்

    நாடு, மதத்தை வைத்து பலாத்காரம் போன்ற குற்றம் நடக்கிறது. அந்த அளவுக்கு தாழ்ந்துவிட்டோம். வெட்கம் இல்லாமல் அடுத்தவர்களை கை காட்டுவதை நாம் நிறுத்துவோமா? ஒரு தேசமாக ஆசிபாவை தோற்கவிட்டுவிட்டோம் என்பதை ஒப்புக் கொள்வோமா என்கிறார் டாப்ஸி.

    சிறுமி

    ஒரு தந்தையாக என் இதயம் வலியால் கதறுகிறது.. இன்னும் எவ்வளவை சகித்துக் கொள்ள வேண்டும்..இது போன்ற குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார் பிரகாஷ் ராஜ்.

    English summary
    Kamal Haasan tweeted that, 'Does it have 2 b ur own daughter fr u 2 understand? She could’ve been mine. I feel angry as a man, father & a citizen fr failing Asifa. I m sorry my child v didn’t make this country safe enough fr U. I’ll fight fr justice at least fr future kids like u. V mourn u & won’t forget u'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X