»   »  அதிமுகவின் 'உண்ணாவிரத போராட்டம்' ஸ்டைலில் போராடிய திரையுலகினர்

அதிமுகவின் 'உண்ணாவிரத போராட்டம்' ஸ்டைலில் போராடிய திரையுலகினர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மவுன அறவழிப் போராட்டம் என்று கூறிவிட்டு திரையுலக பிரபலங்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தனர்.

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

போராட்டம்

போராட்டம்

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலக பிரபலங்கள் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஒரு நாள் அடையாள அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மவுன போராட்டம்

மவுன போராட்டம்

இந்த போராட்டம் மவுன அறவழிப் போராட்டம் என்று நடிகர் சங்க தலைவர் நாசர் மேடையில் அறிவித்தார். போராட்டத்தில் நடிகர்கள் விஜய், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, சத்யராஜ், சிவகுமார் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விஜய்

விஜய்

மவுன போராட்டத்தில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தனர். மேடையில் அமர்ந்திருந்த விஜய்யுடன் எஸ்.ஜே. சூர்யா பேசிக் கொண்டே இருந்தார். மற்றவர்கள் மறுபக்கம் பிசியாக பேசினார்கள்.

சும்மா

சும்மா

சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பிரபலங்கள் போராட்ட களத்தில் அனைவரையும் பார்த்ததும் பேசத் துவங்கிவிட்டனர். தொனத் தொனவென பேசுவதற்கு பெயர் மவுன போராட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

மவுன போராட்டத்தில் திரையுலகினர் பேசியதை பார்த்தபோது காவிரி பிரச்சனைக்காக நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவினர் மூக்கு முட்ட சாப்பிட்டது தான் நினைவுக்கு வருகிறது.

English summary
Tamil film industry people are protesting in Chennai insisting the centre to set up CMB and ban Sterlite copper plant. Celebs are busy talking while it is announced as silent protest.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X