»   »  இந்த ரணகளத்திலும் திரையுலகினருக்கு கிளுகிளுப்பு கேட்கிறது

இந்த ரணகளத்திலும் திரையுலகினருக்கு கிளுகிளுப்பு கேட்கிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தை பார்த்தவர்கள் இந்த ரணகளத்திலும் இவர்களுக்கு கிளுகிளுப்பு கேட்கிறது என்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் இன்று மவுன அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெயருக்கு மட்டும் தான் மவுன போராட்டம்.

பேச்சு

பேச்சு

தமிழக மக்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் திரையுலகினரோ சீரியஸாக இல்லாமல் போராட்ட பந்தலில் ஜாலியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

போராட்டம்

போராட்டம்

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனையின் தீவிரத்தை உணராமல் திரையுலகினர் இடைவிடாது சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்ததை டிவியில் பார்த்து மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

விளம்பரம்

விளம்பரம்

போராடுவது என்றால் எங்களுடன் வந்து போராட வேண்டியது தானே. இப்படி பந்தல் போட்டு ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதற்கு பெயர் போராட்டமா?. இந்த போராட்டத்தால் ஒரு பலனும் இல்லை. நீங்கள் விளம்பரம் தேட மக்கள் பிரச்சனை தான் கிடைத்ததா என்று மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேடை

மேடை

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மேடையில் அமராமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தார். மேடையில் அமர்ந்து காவிரி பற்றி பேசினால் அவருக்கு கர்நாடகத்தில் பிரச்சனை ஏற்படும் என்பதை மனதில் வைத்து நைசாக நழுவினார்.

பெயருக்கு போராட்டம்

பெயருக்கு போராட்டம்

மக்களுக்காக நாங்களும் போராடினோம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக பெயருக்கு நடந்த மவுன போராட்டம் மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

English summary
Tamil Nadu people are irritated to see Tamil film industry people having a good time in Valluvar Kottam in the name of protest.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X