»   »  நடிகை கல்பனா இப்படி திடீர்னு...ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு: ட்வீட்டிய பிரபலங்கள்

நடிகை கல்பனா இப்படி திடீர்னு...ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு: ட்வீட்டிய பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கல்பனா மரணச் செய்தியை கேட்டு திரையுலக பிரபலங்கள் பலர் ஃபேஸ்புக், ட்விட்டரில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா ஹைதராபாத்தில் இன்று மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. விருது விழா மற்றும் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற இடத்தில் அவர் மரணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் ட்விட்டரில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ப்ரித்விராஜ்

உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் கல்பனா சேச்சி! சிறந்த நடிகை மற்றும் மனுஷி. உங்களை எப்பொழுதும் மிஸ் பண்ணுவோம்!!! என்று நடிகர் ப்ரித்விராஜ் ட்வீட் செய்துள்ளார்.

குஷ்பு

கல்பனா சேச்சியை இழந்து வாடும் ஊர்வசி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த நடிகை மற்றும் தேசிய விருது பெற்றவர். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்றுள்ளார் குஷ்பு.

மம்மூட்டி

கல்பனாவின் மறைவுக்கு பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மோகன்லால்

மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான மோகன்லால் கல்பனாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மஞ்சு வாரியர்

கல்பனாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள நடிகை மஞ்சு வாரியர் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.

துல்கர் சல்மான்

கல்பனா சேச்சி பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்துவிட்டேன். நான் குழந்தையாக இருக்கையில் இருந்தே அவரை தெரியும். அவர் எனது குழந்தை பருவம் பற்றி பல கதைகளை என்னிடம் கூறியுள்ளார். அவரை பற்றி பேச வார்த்தை இல்லை என்கிறார் துல்கர் சல்மான்.

ராதிகா

கல்பனாவின் திடீர் மரணம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இப்படி திடீர் என்று. ஊர்வசி மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகை ராதிகா ட்வீட் செய்துள்ளார்.

English summary
Film industry celebs are shocked because of the sudden demise of actress Kalpana. Celebs have condoled the death of Kalpana in social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil