»   »  இறந்துவிட்டார் என்றே நம்ப முடியவில்லை: கமல், மம்மூட்டி, பவன் கல்யாண் வேதனை

இறந்துவிட்டார் என்றே நம்ப முடியவில்லை: கமல், மம்மூட்டி, பவன் கல்யாண் வேதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கலாபவன் மணியின் மரண செய்தியை கேட்டு திரையுலகினர் பலரும் ட்விட்டரில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் கலாபவன் மணி. கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு உயிர் இழந்தார்.

அவரது மரண செய்தியை கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் ட்விட்டரில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

சூர்யா

#kalabhavanmani சிறந்த நடிகருக்கு என் மரியாதை! நல்ல நண்பர். அவருடன் செலவிட்ட நேரத்தை மறக்கவே முடியாது. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் சார் என

குஷ்பு

கலாபவன் மணியின் மரண செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மலையாள திரையுலகின் மிகவும் திறமையான நடிகர். அவருக்கு 46 வயது தான். அண்மை காலமாக பல திறமைசாலிகளை இழந்து வருகிறோம்.

சிபி சத்யராஜ்

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் கலாபவன் மணி சார்! தென்னிந்திய திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு.

கிப்ரான்

கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவருடன் சேர்ந்து பாபநாசம் படத்தில் பணியாற்றினேன். திறமைசாலி. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

பவன் கல்யாண்

அருமையான நடிகர். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் #KALABHAVANMani என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ட்வீட் செய்துள்ளார்.

மம்மூட்டி

கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்த நடிகர் மம்மூட்டி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ப்ரித்விராஜ்

என்னால் அதிரிச்சியில் இருந்து மீள முடியவில்லை. மணி சேட்டா.. நீங்கள் இன்னும் நிறைய நடிக்க வேண்டி இருந்தது. இது நியாயம் அல்ல. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

கமல் ஹாஸன்

என் நண்பன் கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்தேன். மற்றும் ஒரு மலையாள சகோதரர் கல்லீரல் பிரச்சனையால் இறந்துள்ளார். மிகவும் திறமையானவர்.

English summary
Celebs are shocked and saddened by the sudden demise of talented actor Kalabhavan Mani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil