»   »  அவங்கள தூக்கிலிடுங்கள், மனிதம் செத்துவிட்டது: பிரபலங்கள் கோபம்

அவங்கள தூக்கிலிடுங்கள், மனிதம் செத்துவிட்டது: பிரபலங்கள் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜம்முகாஷ்மீரின் 8 வயது சிறுமி ஆசிஃபா 8 கொலை-போராட்டங்கள் வலுத்தது

சென்னை: காஷ்மீரில் 8 வயது சிறுமி திட்டம் போட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை பார்த்து திரையுலக பிரபலங்கள் கொந்தளித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் திட்டம் போட்டு கடத்தப்பட்டு கோவிலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கடத்தி சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர்.

பலாத்காரம்

பாவம் குழந்தை! அவரை கொடுமைப்படுத்தி கொலை செய்தவர்களுக்கு நரகம் காத்திருக்கிறது. அந்த கயவர்களை தூக்கில் போடுங்கள். எப்படி ஒருவரால் இப்படி மனிதத்தன்மை இல்லாமல் இருக்க முடியும் என ட்வீட்டியுள்ளார் ஹன்சிகா.

ராதிகா

இது மனிதத்தன்மையற்ற செயல், இப்படி ஒரு சமூகம் இருப்பதை நினைத்தாலே கொடுமையாக உள்ளது என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்

இது மனிதத்தன்மையற்ற செயல், உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற கொடூரன்களுக்கு எந்த தண்டனையும் கடினமாக இருக்குமா என்று வியக்கிறேன். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

ஷ்ரத்தா கபூர்

8 வயது சிறுமியை பட்டினிபோட்டு, போதைப் பொருள் கொடுத்து, பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இது நடந்தது என்றே நம்ப முடியவில்லை. அந்த சிறுமி இந்த கொடுமையை எல்லாம் எதிர்கொண்டுள்ளார் என்கிறார் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்.#JusticeforAsifa

மனிதம்

என் இதயம் நொறுங்கிவிட்டது, மனிதநேயம் செத்துப் போய்விட்டது என்று குமுறியுள்ளார் சுஜா வருணி.

English summary
Celebrities are angry over Kathua rape issue and want the cuplrits who did this to her to be hanged. Celebs took to twitter to express their views on Kathua case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X