»   »  பிளாஷ்பேக் 2016: பிரம்மச்சரியத்திற்கு குட்பை சொன்ன திரையுலக பிரபலங்கள்

பிளாஷ்பேக் 2016: பிரம்மச்சரியத்திற்கு குட்பை சொன்ன திரையுலக பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2016ம் ஆண்டில் பல திரையுலக பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

2016ம் ஆண்டு இப்பொழுது தான் துவங்கியது போன்று உள்ளது. ஆனால் அதற்குள் இந்த ஆண்டு முடியப் போகிறது. நாம் புத்தாண்டை வரவேற்க இன்னும் 7 நாட்களே உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் பிரபலங்கள் யார், யார் என்று பார்ப்போம்.

அசின்

அசின்

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை காதலித்து கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி திருமணம் செய்தார்.

சேதுராமன்

சேதுராமன்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமான டாக்டர் சேதுராமன் என்ஜினியரான உமையாள் என்பவரை பிப்ரவரி மாதம் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

நகுல்

நகுல்

பாய்ஸ் படம் மூலம் பிரபலமான நடிகை தேவயானியின் தம்பி நகுலுக்கும், காதலி ஸ்ருதி பாஸ்கருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் பிப்ரவரி மாதம் 28ம் தேதி திருமணம் நடந்தது.

அஞ்சனா, கயல் சந்திரன்

அஞ்சனா, கயல் சந்திரன்

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனாவும் கயல் பட ஹீரோ சந்திரனும் காதலித்து கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி திருணம் செய்து கொண்டனர்.

பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா

நடிகர் பாபி சிம்ஹாவுக்கும், நடிகை ரேஷ்மி மேனனுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

விக்ரம் குமார்

விக்ரம் குமார்

யாவரும் நலம், மனம், 24 படங்களின் இயக்குநர் விக்ரம் குமாருக்கும், சவுண்ட் என்ஜினியர் ஸ்ரீநிதிக்கும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி திருமணம் நடந்தது.

ராஜுமுருகன்

ராஜுமுருகன்

குக்கூ, ஜோக்கர் படங்களின் இயக்குனர் ராஜுமுருகனுக்கும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஹேமா சின்ஹாவுக்கும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி திருணம் நடந்தது. இது காதல் திருமணமாகும்.

ரவிக்குமார்

ரவிக்குமார்

விஷ்ணு விஷாலை வைத்து இன்று நேற்று நாளை படத்தை எடுத்த இயக்குனர் ரவிக்குமார் பிரியா கணேசன் என்பவரை செப்டம்பர் மாதம் 6ம் தேதி திருமணம் செய்தார்.

அரோல் கரோலி

அரோல் கரோலி

பிசாசு படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் அரோல் கரோலி. அவருக்கும் ரம்யா என்பவருக்கும் கடந்த நவம்பர் 2ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது.

பூஜா

பூஜா

ஜேஜே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இலங்கையை சேர்ந்த நடிகை பூஜாவுக்கும் அதே நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் பிரஷான் டேவிட்டுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

English summary
Above is the list of Kollywood celebrities who got married in the year 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil