»   »  பிக் பாஸ் அஞ்சு வாட்டி கெஞ்சிக் கூத்தாடியும் வர மறுத்த இளம் நடிகை

பிக் பாஸ் அஞ்சு வாட்டி கெஞ்சிக் கூத்தாடியும் வர மறுத்த இளம் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு 5 முறை அழைத்தும் இளம் நடிகை ஒருவர வர மறுத்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 11வது சீசன் 20 நாட்களில் துவங்க உள்ளது. சர்ச்சைக்கு பெயர் போனவர்களாக பார்த்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சில பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துள்ளனர்.

எவ்லின் ஷர்மா

எவ்லின் ஷர்மா

பாலிவுட் நடிகை எவ்லின் ஷர்மாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைக்க அவரோ மறுத்துவிட்டாராம். பிக் பாஸுக்கு அவர் ஐந்தாவது முறையாக நோ சொல்லியுள்ளார்.

பாரதி

பாரதி

தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் அசத்தி வரும் பாரதியின் வருங்கால கணவர் ஹர்ஷ் லிம்பாசியாவை பிக் பாஸ் அழைத்தும் அவர் மறுத்துள்ளார். டிவியில் புதிய காமெடி நிகழ்ச்சியில் நடிப்பதால் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வர மறுத்துவிட்டாராம்.

தேஜஸ்வி

தேஜஸ்வி

9 வயது சிறுவனுக்கு மனைவியாக நடித்த தேஜஸ்வி பிரகாஷை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளனர். அவரோ நான் புதிய டிவி சீரியலில் நடிக்கிறேன், பிக் பாஸ் வீட்டிற்கு வர முடியாது என்று கூறிவிட்டார்.

ஆர்ஜே நஸர் கான்

ஆர்ஜே நஸர் கான்

ஆர்.ஜே. நஸர் கானை பிக் பாஸ் அழைத்துள்ளார். அவரோ நான் ரொம்ப பிசி பிக் பாஸ் வீட்டிற்கு வர நேரமில்லை என்று கூறிவிட்டாராம். இருப்பினும் அழைத்ததற்கு நன்றி என்றாராம்.

ஷில்பா ஷிண்டே

ஷில்பா ஷிண்டே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக சம்பளம் கேட்கிறார் டிவி நடிகை ஷில்பா ஷிண்டே என்று கூறப்பட்டது. அவரிடம் கேட்டால், அது பொய். சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக் பாஸ் வீட்டிற்கு நான் போக மாட்டேன் என்கிறார்.

English summary
The new season of Colors' biggest reality show, Bigg Boss will soon hit the television screens. Some celebrities have said NO to Bigg Boss as they are busy with their own work.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil