»   »  என்னை நாய் போன்று அடித்ததற்கு நன்றி அப்பா: இப்படியும் தந்தையர் தின வாழ்த்து சொன்ன பிரபலம்

என்னை நாய் போன்று அடித்ததற்கு நன்றி அப்பா: இப்படியும் தந்தையர் தின வாழ்த்து சொன்ன பிரபலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தையர் தினத்தில் பாலிவுட் விமர்சகர் கேஆர்கே ட்வீட்டியது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தந்தையர் தினத்தையொட்டி அனைவரும் தங்களின் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திரையுல பிரபலங்களும் ட்விட்டர் மூலம் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சூரி

பிள்ளைகளுக்காக சொத்து சேக்கலயான்னு கேக்குறப்பலாம் என் பிள்ளைகளே சொத்துதானேனு கெத்தா சொன்ன எங்கப்பாவின் நினைவுகளுடன் தந்தையர் தின வாழ்த்துகள் என நடிகர் சூரி வாழ்த்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே🙏 #HappyFathersDay

குஷ்பு

உலகின் சிறந்த தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். அவரின் குழந்தைகள் தான் அவரின் உலகம். அவர்களை தாண்டி எதையும் பார்க்க மாட்டார். சுந்தர் சி. நீங்கள் தான் பெஸ்ட் என்று குஷ்பு ட்வீட்டியுள்ளார்.

கேஆர்கே

தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா ஜான். சிறு வயதில் படம் பார்த்ததற்காக கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் என்னை நாய் போன்று அடித்ததற்கு நன்றி என்று பாலிவுட் விமர்சகர் கேஆர்கே ட்வீட்டியுள்ளார்.

English summary
Celebrities have wished a happy father's day to the person who is their first hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil