»   »  பாத்டப்பில் நிர்வாணமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட கர்ப்பவதி நடிகை

பாத்டப்பில் நிர்வாணமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட கர்ப்பவதி நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி பாத்டப்பில் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது கர்ப்ப கால மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி தொழில் அதிபர் பீட்டர் ஹாக்கை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சிங்கப்பூர் மற்றும் துபாயில் வசித்து வரும் செலினாவுக்கு வின்ஸ்டன், விராஜ் என இரட்டையர்கள் உள்ளனர்.

இந்நிலையில் செலினா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.

கர்ப்பம்

கர்ப்பம்

இரண்டாவது முறையாக கருத்தரித்துள்ள செலினாவுக்கு மீண்டும் இரட்டைக் குழந்தைகள் பிறக்க உள்ளதாம். கர்ப்பமான செய்தியை பிகினி புகைப்படம் மூலம் உலகிற்கு அறிவித்தார் செலினா.

ஆஸ்த்ரியா

ஆஸ்த்ரியா

கணவர், குழந்தைகளுடன் செலினா அண்மையில் ஆஸ்த்ரியாவுக்கு சென்றார். அங்கு ஓய்வு எடுத்த அவர் இயற்கை சூழலில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.

பாத்டப்

பாத்டப்

ஆஸ்த்ரியாவில் இருந்து செலினா லண்டன் சென்றுள்ளார். லண்டனில் வெளியே சென்றுவிட்டு வந்த அவர் பாத்டப்பில் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பெருமை

பெருமை

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் உடலை நினைத்து பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் தங்களுக்குள் இன்னொரு உயிர் வளர்கிறது. அதனால் எந்த சைஸில் இருந்தாலும் பெண்கள் வெட்கப்படக் கூடாது என்று செலினா தெரிவித்துள்ளார்.

English summary
Well, call it artistic or unusualy, but Celina Jaitly's latest baby bump picture is the talk of the town as she flaunts it in a bath tub and it's a picture like you've never seen before.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil