twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்துல் கலாம் பிறந்தநாள்.. விவேக் பணியை கையிலெடுத்த செல் முருகன்.. சல்யூட்டே பண்ணலாம்!

    |

    சென்னை: அப்துல் கலாமின் அறிவுரைகளை பின்பற்றி சின்னக் கலைவாணர் விவேக் இருந்தவரை ஏகப்பட்ட மரக்கன்றுகளை நட்டு வந்தார்.

    ஆனால், மாரடைப்பு காரணமாக அவர் வெகு விரைவாக இம்மண்ணுலகை விட்டுச் சென்ற நிலையில், அவரது பணியை கையிலெடுத்து செய்து வருகிறார் செல் முருகன்.

    சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.

     பெரிய ரம்பா தொடையா... செல் முருகன் சொன்ன முதல் ஜோக்கால் விழுந்து விழுந்து சிரித்த விவேக் பெரிய ரம்பா தொடையா... செல் முருகன் சொன்ன முதல் ஜோக்கால் விழுந்து விழுந்து சிரித்த விவேக்

    அப்துல் கலாம் பிறந்தநாள்

    அப்துல் கலாம் பிறந்தநாள்

    இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் மறைந்தாலும், அவரது பிறந்தநாளை ஆண்டு தோறும் மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார் நடிகர் செல் முருகன்.

    விவேக் இருந்திருந்தால்

    விவேக் இருந்திருந்தால்

    உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்து வந்த சின்னக்கலைவாணர் விவேக் கடந்த ஆண்டு மாராடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், மற்றவர்களை விட விவேக் உடனே எப்போதும் நிழலாக இருந்து வந்த செல் முருகனுக்கு அது பேரிழப்பு. விவேக் இருந்திருந்தால் இந்நேரம் என்ன செய்திருப்பாரா அதை அவரது நினைவாக தான் எடுத்து செய்ய வேண்டும் என செய்து அசத்தி வருகிறார் செல் முருகன்.

    மரக்கன்று நட்ட செல் முருகன்

    மரக்கன்று நட்ட செல் முருகன்

    நடிகர் விவேக் உடன் பல படங்களில் துணை காமெடியனாக நடித்து வந்த நகைச்சுவை நடிகர் செல் முருகன் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் வித்யாலாயா பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    மாணவர்களுடன்

    மாணவர்களுடன்

    அப்துல் கலாம் அய்யா படத்துடன் பள்ளி மாணவர்கள் சூழ்ந்து நிற்க செல் முருகன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செல் முருகனின் இந்த சமூக சேவையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவர்களிடம் மரக்கன்றுகள் நடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், மரக்கன்றுகளையும் வழங்கினார்.

    English summary
    Cell Murugan celebrates Abdul Kalam birthday with tree planting at Chennai Mogaippair Vellammal Vidhyalaya School and he shared the photos in his Twitter handle. Vivekh fans praises him for his good work.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X