twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி செல்போனில் பாடல்களை திருட்டுத் தனமாக பதிவு பண்ண முடியாது!

    By Shankar
    |

    Cell Muzik
    திரைப்பட இசைக் கலைஞர்கள் கஷ்டப்பட்டு பெரும் செலவில் உருவாக்கும் பாடல்களை யார் யாரோ இலவசமாக செல்போனில் பதிவு செய்து கொள்கிற அவலத்தை தடுக்கும் வகையில் புதிய சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    சவுத் இண்டியா டிஜிட்டல் மியூசிக் மேனேஜ்மென்ட் பி.லிட் நிறுவனம், சவுத் இண்டியா மியூசிக் கம்பெனி அசோசியேஷனுடன் இணைந்து இந்த இசைத் திருட்டுக்கு முடிவு கட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.

    இந்த நிறுவனம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், பக்தி பாடல்கள், கிராமிய பாடல்கள், கர்நாடக இசைப் பாடல்களை 50 முதல் 60 சதவீதம் வரை தயாரித்து வழங்கக்கூடியவர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது. 30 வருடங்களுக்கு மேலான சூப்பர் ஹிட் பாடல்களின் உரிமம் பெற்றுள்ள இந்நிறுவனம், 1957 இந்திய காப்புரிமை சட்டப்படி பாடல் இசையை பதிவு செய்ய உரிமம் பெறுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

    இதற்காக செல் மியூசிக் (CELL MUZIK) என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க மற்றும் அறிமுக விழா சென்னையில் நடந்தது. தொடக்க விழாவில் இசையமைப்பாளர் தினா, பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன், பத்மஸ்ரீ சுதா ரகுநாதன், பாடலாசிரியர் விவேகா, முன்னாள் காவல் துறை அதிகாரி மாதவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதுபோல திருட்டுத்தனமாக பாடல்களை பதிவு செய்து விற்கும் செல்போன் கடைகள் இனி மாதந்தோறும் 1250 செலுத்தி சந்தாதாரராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி பதிவு செய்யாமல் திருட்டுத்தனமாக விற்றால் 1957 இந்திய காப்புரிமை சட்டப்படி குற்றம்.

    உரிமம் பெறாமல் பாடல்களை மொபைல் சிப்பில் பதிவு செய்பவர்களை கண்காணித்து தண்டிக்க முன்னாள் காவல் துறை அதிகாரி தலைமையில் ஒரு குழுவையும் நியமித்திருக்கிறது இந்த அமைப்பு.

    English summary
    Cell Muzik, a new company has launched recently to protect film songs from unauthorised recording in mobile phones.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X