»   »  "டைட்டில் மாத்தணும்.. அதோட 26 கட்.." பத்மாவதி படத்தை வெளியிட சென்சார் போர்டு நிபந்தனை!

"டைட்டில் மாத்தணும்.. அதோட 26 கட்.." பத்மாவதி படத்தை வெளியிட சென்சார் போர்டு நிபந்தனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பத்மாவதி' திரைப்படம் சர்ச்சைக்குரிய கதையால் பல தரப்பிலும் எதிர்ப்புகளைச் சந்தித்தது.

'பத்மாவதி' படத்தை உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளியிட மாட்டோம் என்று அந்தந்த மாநில முதல்வர்களே அறிவித்தனர்.

இந்நிலையில், பத்மாவதி படத்தை ரிலீஸ் செய்ய தற்போது சென்சார் போர்டு மூன்று முக்கிய நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன்படி படத்தின் டைட்டிலை மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

'பத்மாவதி' படத்தில் ராணி பத்மினி பற்றிய தவறான கருத்துகள் இடம்பெறுவதாகக் கூறி ராஜபுத்திரர்கள் அமைப்பினர் படத்தைத் திரையிட எதிர்ப்புத் தெரிவித்தனர். படம் நிச்சயம் வெளியாகும் எனக் கூறிய தீபிகா படுகோனேவின் தலையை வெட்டினால் 5 கோடி பரிசு என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

ரிலீஸ் தள்ளிவைப்பு

ரிலீஸ் தள்ளிவைப்பு

பத்மாவதி படத்தின் ஷூட்டிங் முடிந்து சில மாதங்களாகிவிட்டன. கடந்த டிசம்பர் மாதமே படம் ரிலீஸாக வேண்டியது. ராஜபுத்திர அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு படத்திற்கு சென்சார் பெறுவதிலும் சிக்கல் நீடித்தது. இதனால் படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

திரையிட தடை

திரையிட தடை

படத்திற்கு எதிர்ப்பு வலுத்ததால், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் படத்தை திரையிட மாட்டோம் என்று அறிவித்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி மீதும், நடித்த தீபிகா படுகோனே மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.

டைட்டில் மாற்ற வேண்டும்

டைட்டில் மாற்ற வேண்டும்

இந்நிலையில், படத்தில் சர்ச்சைக்குரிய 26 காட்சிகளை நீக்க வேண்டும், 'பத்மாவதி' என்ற பெயருடன் ரிலீஸாகாமல் 'பத்மாவத்' என்ற பெயரில் ரிலீஸ் செய்யலாம் மற்றும் படத்தில் மூன்று முறை ஒரு விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது.

சென்சார் போர்டு நிபந்தனை

சென்சார் போர்டு நிபந்தனை

இந்த நிபந்தனைகளுக்கு படக்குழு ஒப்புக்சொன்னால் யு/ஏ சான்று வழங்குவதாக சென்சார் போர்டு பரிந்துரை செய்துள்ளது. சென்சார் போர்ட்டின் இந்த நிபந்தனைக்கு படக்குழு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் படம் சென்சார் சான்றிதழ் பெற்று, ஜனவரி 18-ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

English summary
Deepika Padukone, Ranveer Singh and Shahid Kapoor starred Bhansali's 'Padmavati' film have been faced with controversial stories. In this case, the Censor Board has decided to give U/A certificate along with some modifications and likely change of the title to 'Padmavat'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X