»   »  கமல் ஹாஸன் ஹீரோயினின் படத்திற்கு தடை விதித்த சென்சார் போர்டு

கமல் ஹாஸன் ஹீரோயினின் படத்திற்கு தடை விதித்த சென்சார் போர்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரவீனா டான்டன் நடித்துள்ள மாத்ர் படத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகம் இருப்பதாகக் கூறி சென்சார் போர்டு அதற்கு தடை விதித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆளவந்தான் படத்தில் உலக நாயகன் கமல் ஹாஸனின் ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ரவீனா டான்டன். அவர் மாத்ர் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.

அந்த படம் 21ம் தேதி ரிலீஸாக வேண்டியது. இந்நிலையில் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தடை

தடை

படத்தை பார்த்த சென்சார் போர்டு படத்திற்கு தடை விதித்துள்ளதாம். பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகள் அப்பட்டமாக இருப்பதாகக் கூறி தடை விதித்திருக்கிறதாம்.

காட்சிகள்

காட்சிகள்

பலாத்கார காட்சிகள் எப்பொழுதுமே சிக்கலானவை. அவை எப்பொழுது அதிர்ச்சிகரமாக மாறும் என்று கூற முடியாது. மாத்ர் படம் மூலம் நல்லதை கூற முயன்றாலும் பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகளை அனுமதிக்க முடியாது என்று சென்சார் போர்டு தெரிவித்துள்ளதாம்.

ரவீனா

ரவீனா

சென்சார் போர்டு இன்னும் பழைய காலத்து சட்டங்களையே பின்பற்றுகிறது. காலத்திற்கேற்ப மாறிக் கொள்ள வேண்டும் என ரவீனா டான்டன் பேட்டி அளித்துள்ளார்.

முடியாது

முடியாது

மாத்ர் போன்ற படத்தில் காட்சிகளை அப்படியே தான் காட்ட முடியும். உண்மையை பளிச்சென்று சொல்லாவிட்டால் மக்கள் பலாத்காரம், பாலியல் கொடுமைகளை கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிறார் ரவீனா.

English summary
Censor board has reportedly banned Raveena Tandon's Maatr movie citing scenes of gruesome violence against women.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil