»   »  காஜல் அகர்வாலின் 'லிப் டூ லிப்' காட்சியை வெட்டி எறிந்த தணிக்கைக் குழு!

காஜல் அகர்வாலின் 'லிப் டூ லிப்' காட்சியை வெட்டி எறிந்த தணிக்கைக் குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: காஜல் அகர்வாலின் லிப் டூ லிப் முத்தக்காட்சிகளை தணிக்கைக்குழு பாரபட்சம் பாராமல் வெட்டி எறிந்துள்ளது.

தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தற்போது ‘டூ லப்ஷான் கி கஹானி' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

காஜலுடன் இணைந்து ரன்தீப் ஹூடா நாயகனாக நடித்து வரும் இப்படத்தில், ரன்தீப் ஹூடா-காஜலின் லிப் டூ லிப் முத்தக்காட்சி பாலிவுட் தாண்டியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Censor Board Cut Kajal Agarwal's lip lock Scenes

தென்னிந்திய சினிமாவில் இதுவரை காஜல் அகர்வால் இதுபோன்ற காட்சிகளில் நடித்தது இல்லை என்பதால் கோலிவுட், டோலிவுட் ஹீரோக்களின் காதில் இந்த செய்தி புகை வர வைத்தது.

இந்நிலையில் காஜலின் லிப் டூ லிப்பை வைத்து படத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்த படக்குழு தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

காரணம் படத்தில் 18 நொடிகள் இடம்பெறும் அந்த முத்தக்காட்சி படு ஆபாசமாக இருப்பதாகக் கூறி, தணிக்கைக்குழுவினர் அவற்றை பாரபட்சம் பாராமல் வெட்டி எறிந்துள்ளனர்.

இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த முத்தக்காட்சி தனது இந்தி மார்க்கெட்டுக்கு பெரிதும் உதவும், என நம்பியிருந்த காஜல் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளாராம்.

English summary
Do Lafzon Ki Kahani: Censor Board Cut Randeep Hooda-Kajal Agarwal lip lock Scenes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil