»   »  ஆளும் கட்சிக்கு கட்டுப்பட்டே நடக்கிறது சென்சார் போர்டு... மணிரத்னம் பரபரப்பு புகார்

ஆளும் கட்சிக்கு கட்டுப்பட்டே நடக்கிறது சென்சார் போர்டு... மணிரத்னம் பரபரப்பு புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட தணிக்கைக்குழு சுயமாக செயல்படாமல், அப்போது ஆட்சியில் இருக்கும் கட்சிக்குக் கட்டுப்பட்டு, அதன் விருப்பப்படியே செயல்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார் பிரபல இயக்குநர் மணிரத்னம்.

தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி, முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம்.

இந்நிலையில், கடந்தவாரம் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவையொட்டி நடந்த கருத்தரங்கில் மணிரத்னம் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தணிக்கை குழு...

தணிக்கை குழு...

திரைப்பட தணிக்கை குழு சுயமாக செயல்படும் அமைப்பு. அப்படித்தான் செயல்பட வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக இந்த அமைப்பு அப்படி நடந்து கொள்வது இல்லை.

ஆளும் கட்சி கட்டுப்பாட்டில்...

ஆளும் கட்சி கட்டுப்பாட்டில்...

தனது விருப்பப்படி சுயமாக செயல்படும் தன்மையை இழந்து ஆளும் அரசியல் ஆட்சிக்கு கட்டுப்பட்டு, அதன் விருப்பப்படி செயல்படுகிறது.

மும்பை...

மும்பை...

எனது மும்பை, இருவர் படங்கள் தணிக்கை குழுவால் பெரும் சோதனையும், இன்னல்களையும் சந்தித்தது. எனவே, இதை குறிப்பிடுகிறேன்.

ரசிகர்கள்...

ரசிகர்கள்...

இன்றைய ரசிகர்கள் திரைப்படம் பற்றி அதிகமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய ரசிப்புத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னேற்றப் பாதையில்...

முன்னேற்றப் பாதையில்...

அதற்கு ஏற்ப திரைப்பட படங்களை வழங்க வேண்டும். திரைப்படத்துறையின் முன்னேற்றத்துக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
The party in power often misuses the Central Board of Film Certification (CBFC) as a tool to push its political agenda, which results in extra-Constitutional authorities dictating terms, said renowned film-maker Mani Ratnam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil