»   »  தீபாவளியை வேதாளம் 'தல' தெறிக்க விடப்போகிறார்: பாராட்டிய சென்சார் போர்டு

தீபாவளியை வேதாளம் 'தல' தெறிக்க விடப்போகிறார்: பாராட்டிய சென்சார் போர்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்தை பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் அஜீத் இந்த தீபாவளியை தெறிக்க விடப் போகிறார் என்று பாராட்டியுள்ளார்களாம்

தீபாவளி அன்று அஜீத் நடித்துள்ள வேதாளம் படம் ரிலீஸாக உள்ளது. தல தீபாவளியை கொண்டாட அஜீத் ரசிகர்கள் தயாராகிவிட்டனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள இரண்டாவது படம் வேதாளம்.


அண்ணன், தங்கை இடையிலான பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.


ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

வேதாளம் படம் மூலம் ஸ்ருதி ஹாஸன் முதல் முறையாக அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார். அவர் ஹீரோயின் என்றாலும் படத்தின் பல காட்சிகளில் தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன் தான் வருகிறாராம்.


பைக்

பைக்

அஜீத்துக்கு பைக் ஓட்டுவது என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று நாங்கள் கூறி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. இந்த படத்தில் அவர் ஹார்லி டேவிட்சன், டுக்காட்டி பைக்குகளில் சாகசம் செய்துள்ளாராம்.


காமெடி

காமெடி

ஆக்ஷன் தெறிக்கும் வேதாளம் படத்தில் அஜீத் காமெடியும் செய்திருக்கிறார். இந்த படத்தை பார்க்கும் பெண்கள் நமக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லையே என்று ஏங்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாம்.


தணிக்கை குழு

தணிக்கை குழு

வேதாளம் படத்தை பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் அஜீத் இந்த தீபாவளியை தெறிக்க விடப் போகிறார் என்று பாராட்டியுள்ளார்களாம். படத்தில் பல தெறிக்கும் வசனங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.


English summary
Censor board has reportedly praised Ajith starrer Vedhalam to be released on Diwali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil