For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சென்சார் கொடுமைகள்... முடிவு கட்டுவது யார்?

  By Shankar
  |

  தமிழ்நாட்டில் என்ன தொழில் வேண்டுமானாலும் பண்ணிவிடலாம். இந்த சினிமாவை எடுத்து ரிலீஸ் செய்வதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். ஃப்ரேமில் எங்கேயோ ஒரு மாடு போய்விட்டால் போதும் விடமாட்டார்கள் ப்ளுகிராஸில்.

  சமீபகாலமாக சென்சாரில் படங்கள் வதைபட்டு வெட்டுபட்டு கொடுமைக்குள்ளாகி வருகின்றன.

  மெட்ரோ

  மெட்ரோ

  ஆள் படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணனின் அடுத்த படம் மெட்ரோ. பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருக்கும் இந்த படத்துக்கு வில்லனானது தமிழ்நாட்டு சென்சார் கமிட்டி. படத்தை பார்த்துவிட்டு ரிலீஸ் பண்ண தடை விதித்துவிட்டனர். படத்தின் மையக் கருவான செயின் பறிப்பு பற்றி டீடெய்லாக விவரிக்கிறது படம். இது செயின் பறிக்க கற்று தருவது போல் இருக்கிறது. எனவே படத்தை வெளியிடவே தடை விதிக்கிறோம் என சொல்லிவிட்டார்கள்.

  படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்றால் இந்தந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று சுமார் ஒரு மணி நேர காட்சிகளை குறித்திருக்கிறார்கள். அதன்பின் ரிவைசிங் கமிட்டி எனப்படும் மறுதணிக்கை குழுவுக்கு சென்று சுமார் 50 நாட்களுக்கு பின்னர் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள். படத்துக்கு ஏ சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்கள். காரணம் வன்முறை காட்சிகள் அதிகம் என்பதாலாம்.

  சாய்ந்தாடு

  சாய்ந்தாடு

  மருத்துவ சோதனையின் விளைவுகளை பற்றி கஸாலி என்னும் அறிமுக இயக்குனர் படம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பார்த்த சென்சார் குழுவும் கஸாலிக்கு சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்துள்ளனர். முக்கியமான பத்து காட்சிகளை நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் தர கொதித்து போய் ரிவைசிங் கமிட்டி சென்றிருக்கிறார். அங்கே சில கட்டுகளுடன் யு/ஏ கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களிலும் படங்கள் தப்பிக்கக் காரணம் இயக்குநர் கங்கை அமரன். அவர் ரிவைசிங் கமிட்டியில் இருப்பதால் அவர் காட்டும் கருணையால் படங்கள் தப்பித்தன.

  கொளஞ்சி

  கொளஞ்சி

  மூடர் கூடம் நவீன் தயாரிப்பில் வரவிருக்கும் படம் கொளஞ்சி. ஒரு ஸ்ட்ராங்கான மெஸேஜ் சொல்லும் இந்த படம் அப்பாவுக்கும் பள்ளி செல்லும் மகனுக்குமான பிணைப்புதான் கதைக்களமே... படத்தில் ஆங்காங்கே தீண்டாமை பற்றிய வசனங்கள் இருந்துள்ளன. இதனை பார்த்த சென்சார் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனராம். ஏன் இப்படியெல்லாம் தப்பு தப்பா காமிக்கிறீங்கோ... என்று ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களும் படாதபாடு பட்டு சென்சார் சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள்.

  உத்தா பஞ்சாப்

  உத்தா பஞ்சாப்

  பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் தனது உத்தா பஞ்சாப் படத்துக்கு உயர் நீதிமன்றத்தை நாடி ஒட்டுமொத்த சினிமாக்காரர்கள் வயிற்றில் பாலை வார்த்தார். பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் போதைப் பொருள் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உத்தா பஞ்சாப் படத்துக்கு 13 இடங்களில் கத்தரி வைத்தது சென்சார் போர்டு. மேலும் பஞ்சாப் என்னும் பெயரையும் டைட்டிலில் அனுமதிக்க மாட்டோம் என சொல்ல, அனுராக் நீதிமன்றத்தை நாடினார். அங்கே ஒரே ஒரு கட்டுடன் படம் வெளியிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘படத்தை பார்த்து சான்றிதழ் தர மட்டுமே சென்சார் கமிட்டிக்கு உரிமை உள்ளது. காட்சிகளை நீக்கவோ, படத்தையே தடை செய்யவோ உரிமை இல்லை. இன்னும் பழைய காலத்திலேயே இருந்தால் எப்படி?'என்றும் காரசாரமாக கேள்விகளைக் கேட்டுள்ளது நீதிமன்றம். திருந்துமா தணிக்கைக் குழு?

  English summary
  Nowadays the censor boards in the country become big headache to film makers due to their unreasonable restrictions.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X