twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிலைட் தியேட்டர்: நினைத்ததை முடிப்பவன் படத்தை திரையிடும் நூற்றாண்டைக் கடந்த கோவை வெரைட்டி ஹால்

    |

    கோவை: தென்னிந்தியாவின் முதல் திரையரங்கான டிலைட் திரையரங்கம் பராமரிப்பு பணிகள் முடிந்து, முதல் படமாக புதிய தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட உள்ளது.

    இன்றைக்கு படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் எடுக்க சென்னையிலும், அவுட்டோர் ஷூட்டிங்குகள் வெளியூர்களிலும் எடுக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் சினிமா நுழைந்த ஆரம்ப காலத்தில், தென்னிந்தியாவில் முதன்முதலில் கோவையில் தான் ஸ்டுடியோக்களும், சினிமா தியேட்டர்களும் உருவாக்கப்பட்டன.

    Centennial Adventure in Kovai is a Delite Theater

    அப்படி உருவாக்கப்பட்ட சினிமா தியேட்டர் தான் வெரைட்டி ஹால் என்றழைக்கப்படும் இன்றைய டிலைட் தியேட்டர். கடந்த 1914ஆம் அண்டு இந்த தியேட்டர் கட்டப்பட்டு முதன் முதலில் வள்ளித் திருமணம் படம் திரையிடப்பட்டது. இதுதான் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட நிரந்தரமான முதல் தியேட்டர் ஆகும்.

    கோவையில் தொடர்ந்து பல தியேட்டர்கள் கட்டப்பட்டு, இவை கலைக்கூடங்களாக மட்டுமில்லாமல், மக்களின் கவலைகளை போக்கி, கனவுகளை வளர்க்கும் கூடமாகவும் பெருகின. தமிழகத்தில், ஒரு நுாற்றாண்டு காலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த சினிமா தியேட்டர்கள் நாளடைவில் திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் மால்களாகவும் உருமாறிவிட்டன.

    Centennial Adventure in Kovai is a Delite Theater

    தென்னிந்தியாவின் முதல் திரைப்பட நகரமாக விளங்கிய கோவையில், பழமையான திரையரங்குகள், புகழ்பெற்ற ஸ்டூடியோக்கள் எல்லாம் இன்றைக்கு குடோன்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இதில் ஒரே ஆறுதல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் தியேட்டர் ஒரு நுாற்றாண்டை கடந்து இன்றும் இயங்கி வருகிறது.

    இந்நிலையில், சில நாட்களாக தியேட்டரில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்து மீண்டும் புதுப்பொலிவுடன் கோலாகலமாக தொடங்குகிறது. முதல் தித்திக்கும் காவியம் என்ன தெரியுமா, மக்கள் திலகம் எம்ஜிஆரின் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள நினைத்ததை முடிப்பவன் காவியம் திரையிடப்பட்டு புரட்சித்தலைவரின் பக்தர்கள் விழா கொண்டாடி சிறப்பிக்க உள்ளனர்.

    கோவையில் முதல் ஸ்டூடியோ பட்சிராஜா ஸ்டூடியோ இரண்டாவது சென்ட்ரல் ஸ்டூடியோ எம்ஜிஆர், கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன் போன்றவர்கள் எல்லாம் இங்கே இருந்துதான் நடித்து, பின்னர் சென்னை சென்றனர் எம்ஜிஆருக்கும் சாண்டோ சின்னப்பா தேவருக்கு நட்பு ஏற்பட்டு பால்ய நண்பர்கள் ஆனதும் இங்கே தான்.

    Read more about: kovai கோவை
    English summary
    South India's first theater, Delite Theater, is about to be completed and the first film screening in MGR’s Ninaithathai Mudippavan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X