twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஷ்மீர் மக்களின் கலை பண்பாட்டை சிதைக்க மத்திய அரசு சதி - இயக்குநர் வ.கவுதமன்

    |

    சென்னை: காஷ்மீர் மக்களுக்கே உரித்தான கலை பண்பாட்டை சிதைக்கும் வேலையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்திய ஒன்றியத்தை ஒரே நாடாக்க செய்யும் முயற்சி உலகம் அழிகும் வரை ஏற்படுத்தவே முடியாது என்று இயக்குநர் வ.கவுதமன் காட்டமாக கூறியுள்ளார்.

    தமிழ்த் திரையுலகில் 1999ஆம் ஆண்டு முரளி, சிம்ரன் நடிப்பில் கனவே கலையாதே என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் வ.கவுதமன். இவர் சிறந்த தமிழ் உணர்வாளராகவும் அறியப்படுபவர். அவ்வப்போது தமிழர் பிரச்சனை தொடர்பாகவும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருபவர்.

    Central Government has made a huge mistake in Kashmir Issue - Director V.Gowthaman

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட விவசாயிகளின் பிரச்சனைக்காக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தை பூட்டு போட்டு போராட்டம் நடத்தியவர். இப்பொழுது காஷ்மீர் பிரச்சனைக்காக குரல் கொடுக்க முன்வந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு மாபெரும் தவறு செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

    காஷ்மீர் மக்களின் உரிமை மறுக்கப்பட்டு மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை நேர்மையான செயலாக பார்க்க முடியாது இந்திய வரலாற்றில் கரை படிந்த வரலாறாக பார்க்க முடியும்.

    வந்த வேகத்தில் வேலையை ஆரம்பித்த கஸ்தூரி! சேரனை மரண கலாய்! விளாசும் நெட்டிசன்ஸ்! வந்த வேகத்தில் வேலையை ஆரம்பித்த கஸ்தூரி! சேரனை மரண கலாய்! விளாசும் நெட்டிசன்ஸ்!

    நேருவால் போடப்பட்ட ஒப்பந்தம் தனி கொடி தனி நாடாக இருக்கலாம் என 1950ஆம் ஆண்டில் ஷேக் அப்துல்லாவை சிறை பிடித்து ஜம்மு மக்களுக்கு நம்பிக்கை துரோகத்தை காங்கிரஸ் செய்தது. தற்போது மீண்டும் பெரும் துரோகத்தை இந்திய அரசு செய்திருக்கிறது.

    அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் மறைக்கப்பட மாட்டாது. கனவு நிறைவேற்றப்பட்டதாக சொல்லலாம். இந்தியாவின் அமைதியை கெடுக்கும் என்பதை நினைத்து இந்த முடிவை மாற்ற வேண்டும். பல அரசு நிறுவனங்களை தனியாரிடம் மாற்ற நினைத்திருக்கிறது.

    தமிழகத்தின் மீது விழும் முதல் அடியாக நீலகிரி மலை ரயில் தனியாரிடம் ஒப்படைக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தனியாருக்கு ஒப்படைத்தால் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். சாதாரண மக்கள் எப்படி பயணம் செய்ய முடியும்.

    நாட்டில் தற்போது இரண்டு மலை ரயில்கள் மட்டுமே உள்ளது. டார்ஜிலிங் மற்றும் ஊட்டி. மத்திய அரசு கை வைக்க தமிழகம் தான் கிடைத்ததா. எனவே ஊட்டி மலை ரயிலை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தத்தை ஆரம்பத்திலேயே நிறுத்த வேண்டும்.

    சூயஸ் குடிநீர் திட்டம் தமிழ் இனத்தை தண்ணீருக்கு கையேந்த வைக்கும் திட்டம். தற்போது பெய்த சிறு மழையில் முப்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் நிறைந்து விட்டது. அப்படியிருக்க இங்குள்ள தண்ணீரை எடுக்க பிரான்ஸ் நிறுவனத்திற்கு ஏன் அனுமதி கொடுக்க வேண்டும்.

    உடனடியாக சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி என்னும் எமனால் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. எனவே ஜி.எஸ்.டியை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    காஷ்மீர் மக்களுக்கே உரித்தான கலை பண்பாட்டை சிதைக்கும் வேலையை துவங்கியுள்ளனர். இந்திய ஒன்றியத்தை ஒரே நாடாக்க செய்யும் முயற்சி உலகம் அழியும் வரை ஏற்படுத்தவே முடியாது என்று காட்டமாக கூறினார்.

    English summary
    The Central Government has begun the task of disrupting the artistic culture of the people of Kashmir. The attempt to unify the Indian Union cannot be done until the world is destroyed, Director V Gowdaman has said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X