»   »  கஞ்சா கருப்பு மற்றும் மனைவி மீது செயின் பறிப்பு வழக்கு!

கஞ்சா கருப்பு மற்றும் மனைவி மீது செயின் பறிப்பு வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே வியாழக்கிழமை இரவு வக்கீலைத் தாக்கி 6 பவுன் நகையைப் பறித்ததாக காமெடி நடிகர் கஞ்சா கருப்பு மற்றும் அவர் மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலூர் அருகே உள்ள புலிமலைப்பட்டியைச் சேர்ந்த வழக்குரைஞர் நீதித்தேவன். இவரும், இவரது நண்பர்கள் பாஸ்கரன் உள்ளிட்டோர் சிவகங்கை மாவட்டம், ஏரியூருக்கு இரு சக்கர வாகனங்களில் வியாழக்கிழமை இரவு சென்றுள்ளனர். பின்னர், திரும்பி வகத போது அங்கு சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Chain Snatching case against Kanja Karuppu

இதையடுத்து கண்மாய்பட்டி அருகே காரில் வந்த கஞ்சாகருப்பு, அவரது மனைவி மற்றும் 11 பேர் 3 இரு சக்கர வாகனங்களைத் தாக்கி, 6 பவுன் நகையைப் பறித்துச் சென்றுவிட்டதாக கீழவளவு போலீஸில் வழக்குரைஞர் நீதித்தேவன் புகார் அளித்தார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
Madurai Keezhavalavu police has filed chain snatching case against Kanja Karuppu and his wife.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil