twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல் பண்ண வருகிறார் 'சேர்மன்'

    By Siva
    |

    சென்னை: அரசியலை வியாபாரமாக பார்க்காமல் மக்கள் சேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் படம் சேர்மன்.

    அரசியல் என்பது மக்களுக்காக சேவை செய்வதற்காக கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாக அல்லாமல் இன்று வியாபாரமாகிவிட்டது. இந்த நிலை மாறி அரசியலை மக்கள் சேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் 'சேர்மன்'.

    அம்மா பிக்சர்ஸ் சார்பில் ராஜதானி டாக்டர் பிஜு ரமேஷ் சமுக சிந்தனையுள்ள காதல் கலந்த படமாக உருவாக்கியுள்ளார்.

    கமர்ஷியல் படம்

    கமர்ஷியல் படம்

    காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த ஒரு கமர்ஷியல் படம் சேர்மன்.

    திருவனந்தபுரம், கோவா

    திருவனந்தபுரம், கோவா

    படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருவனந்தபுரம், ஆலப்புழா, கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

    அரசியல் களம்

    அரசியல் களம்

    இன்றைய அரசியல் களத்தை படத்தில் அப்படியே காண்பிக்கிறோம் என்று இயக்குனர் பவன் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

    நாயகன் பஷீர்

    நாயகன் பஷீர்

    இந்த படத்தின் மூலம் டாக்டர் எஸ்பிஎஸ் பஷீர் நாயகனாக அறிமுகமாகிறார். அனுஷா, தஞ்சனா, சுவேகா ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகின்றனர்.

    கதை, திரைக்கதை, இயக்கம் பன்னீர்

    கதை, திரைக்கதை, இயக்கம் பன்னீர்

    சேர்மன் படத்தில் துபாய் மாகின் வில்லனாக அறிமுகமாகின்றார். ஒளிப்பதிவை தினேஷ் கவனித்துக் கொள்கிறார். நடனம் ராம் முருகேஷ் பொறுப்பு. படத்திற்கு ஜூடு தேடன்ஸ் இசையமைக்கிறார். கதை திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்குகிறார் பவன் பன்னீர் செல்வம்.

    English summary
    Pawan Panneerselvam is directing a movie titled 'Chairman'. This commercial movie carries the message that politics is not a business.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X