»   »  ஆகஸ்ட் 7ம் தேதி ஓடி வருகிறான் ‘சண்டி வீரன்’

ஆகஸ்ட் 7ம் தேதி ஓடி வருகிறான் ‘சண்டி வீரன்’

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலா தயாரிக்க சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள சண்டி வீரன் படம் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ரிலீசாக உள்ளது.

களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களை இயக்கியவர் சற்குணம். இவர் தற்போது இயக்குநர் பாலாவின் சொந்த நிறுவனமான பி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சண்டி வீரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

Chandi veeran to be released on August 7th

இப்படத்தில் அதர்வா நாயகனாகவும், கயல் ஆனந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப் பட்டது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியானது.

Chandi veeran to be released on August 7th

அவற்றிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இந்நிலையில், இப்படத்தினை வரும் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீகிரீன் புரோடக்‌ஷன் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் தியேட்டர் உரிமையை பெற்று படத்தை வெளியிடுகிறது.

English summary
Actor Atharva's next movie chandi veeran is releasing on 7th of August
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil