»   »  மாஸ்.. அழகு.. சூப்பர்... சண்டிவீரனை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

மாஸ்.. அழகு.. சூப்பர்... சண்டிவீரனை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதர்வா முரளி ஆனந்தி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் சண்டிவீர்ன் திரைப்படம் ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்று வருகிறது. கிராமத்து மண் மணம் மாறாமல் சண்டிவீரன் இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் வந்திருக்கும் சண்டிவீரன் கண்டிப்பாக வெற்றித் திரைப்படமாக மாறும் என்று ரசிகர்கள் சூடம் ஏற்றாத குறையாக சத்தியம் செய்து கூறி இருக்கின்றனர்.


படத்தில் அஜீத்தின் வீரத்திலிருந்து சில காட்சிகள் பயன்படுத்தப் பட்டிருப்பதால் அஜீத் ரசிகர்களின் ஆதரவையும் சண்டிவீரன் பெற்றிருக்கிறது, சண்டிவீரன் படத்தைப் பற்றிய ரசிகர்களின் ட்வீட்டுகள் சிலவற்றை இங்கு காணலாம்.


இடைவேளை வரை

சண்டிவீரன் இடைவேளை வரை நன்றாக இருக்கிறது என்று சி.பி.செந்தில்குமார் என்னும் ரசிகர் கூறியிருக்கிறார்.


கிராமிய மணம் கமழும் சண்டிவீரன்

கிராமியக் கதையில் காதல், காமெடி, சண்டை எல்லாம் நிறைந்த ஒரு இடைவேளை என்று சரவணன் ட்வீட்டி இருக்கிறார்.


காதல் காட்சிகள் சூப்பர்

சண்டிவீரன் படத்தில் காதல் காட்சிகள் நன்றாக இருக்கின்றன, படத்தின் வெற்றியில் காதல் கட்சிகளின் பங்கு அதிகம் இருக்கும் என்று மகா விஷ்ணு என்ற ரசிகர் சண்டிவீரனை காதலித்துக் கூறியிருக்கிறார்.


சற்குணத்தின் ரசிகன் நான்

நான் எப்போதுமே இயக்குநர் சற்குணத்தின் ரசிகன்( நையாண்டி திரைப்படம் விதிவிலக்கு) சண்டிவீரன் படத்தில் சற்குணம் மீண்டிருக்கிறார், ஆனால் பழையபடி அவர் வர இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்று வசந்தன் என்னும் ரசிகர் கூறியிருக்கிறார்.


அதர்வா கொள்ளை அழகு

சண்டிவீரனில் அதர்வா கொள்ளை அழகாக இருக்கிறார், மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் சண்டிவீரன் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று பானு என்னும் ரசிகை கூறியிருக்கிறார்.


சண்டிவீரன் மாஸ்

அதர்வாவின் சண்டிவீரன் மாஸ் அஜீத்தின் வீரம் பாடல் காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது என்று மகாராஜா என்னும் ரசிகர் கூறியிருக்கிறார்.


சற்குணம் மீண்டிருக்கிறார்

சண்டிவீரன் இடைவேளை வரை சுவாரசியமாக செல்கிறது, சற்குணம் மீண்டும் பார்முக்குத் திரும்பியிருக்கிறார் என்று பிரசாந்த் என்னும் ரசிகர் தெரிவித்து இருக்கிறார்.


English summary
Chandiveeran - Fans Twitter Comments
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil