»   »  கமல் நாட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டவர் சந்திரஹாஸன்

கமல் நாட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டவர் சந்திரஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஸ்வரூபம் பட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தபோது அதை சட்டப்படி எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தவர் சந்திரஹாஸன்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன்(82) மாரடைப்பால் மரணம் அடைந்தார். லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அனுஹாஸன் வீட்டிற்கு சென்ற இடத்தில் அவர் காலமானார்.

Chandra Haasan was more than a brother to Kamal

சாருஹாஸனை போன்று சந்திரஹாஸனும் ஒரு வழக்கறிஞர் ஆவார். கமலின் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார். கமலின் கால்ஷீட் விவகாரங்களை பார்த்து வந்தார்.

விஸ்வரூபம் பிரச்சனை பெரிதாக வெடித்தபோது சட்டரீதியான நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டவர் சந்திரஹாஸன். கமலுக்கு அண்ணனையும் தாண்டி தந்தையாக, வலது கையாக இருந்தவர்.

சந்திரஹாஸன் இல்லை என்றால் தன்னால் நல்ல படங்களை தயாரித்திருக்க முடியாது என்று கமல் முன்பு தெரிவித்திருந்தார்.

English summary
Chandra Haasan who died of cardiac arrest last night was more than a brother to actor Kamal Haasan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil