twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இஸ்லாமிய தலைவர்களுடன் கமல் அண்ணன் சந்திரஹாஸன் பேச்சு

    By Shankar
    |

    Chandrahassan
    சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் சுமூக முடிவுக்கு வரும் பொருட்டு இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுடன் பேச்சு நடத்துகிறார் கமல் அண்ணன் சந்திரஹாஸன்.

    கமல் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு தடை விதித்தது.

    இதனால் கமல் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி தடையை நீக்கினார். ஆனால் அன்று இரவே அப்பீல் செய்து அடுத்த நாள் மீண்டும் தடை பெற்றுவிட்டது அரசு. வழக்கு விசாரணை வருகிற 6-ந்தேதி நடக்க உள்ளது.

    இந்த நிலையில் 'விஸ்வரூபம்' வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அரசு உதவும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    கமல்ஹாசனும் முஸ்லிம் அமைப்புகளும் முன் வந்து பேசி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு சுமூக தீர்வு கண்டால் இப்படம் திரையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துவிட்டார்.

    இதனை கமல் தரப்பிலும் முஸ்லிம் அமைப்புகள் தரப்பிலும் வரவேற்றுள்ளனர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    இன்று பிற்பகல் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பேச்சு வார்த்தை நடைபெறும் என தெரிகிறது.

    இஸ்லாமிய கூட்டமைப்பில் 24 சங்கங்கள் உள்ளன. அவற்றின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்கள். கமல் தற்போது மும்பையில் இந்தி 'விஸ்வரூபம்' வெளியீட்டில் உள்ளதால், அவரது அண்ணனும் ராஜ்கமல் பிலிம்ஸ் உரிமையாளருமான சந்திரஹாசன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இயக்குநர் அமீரும் கமல் சார்பில் கலந்து கொள்கிறார்.

    அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த பேச்சுவார்த்தை நடப்பதால், இது முத்தரப்பு பேச்சுவார்த்தையாக மாறியுள்ளது.

    English summary
    Kamal's brother Chandrahassan will be participated in the talks with Islamic leaders to arrive an amicable settlement in Viswaroopam issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X