»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 6வது ஆண்டு நினைவுநாளையொட்டி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் நினைவாக ஸ்டாம்ப் மற்றும் தபால் கவர் வெளியிடப்படுகிறது.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்து 6 ஆண்டுகளாகிறது. இதையொட்டி நாளை சென்னையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு சிவாஜி -பிரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சியின்போது சந்திரபாபு நினைவு தபால் தலை மற்றும் தபால் கவர் ஆகியவை வெளியிடப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கே.ஆர்.ஜி., திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil