»   »  பாகுபலிக்கு ஆஸ்கர்... லாபியை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு!

பாகுபலிக்கு ஆஸ்கர்... லாபியை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி 2 படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

பாகுபலி முதல் பாகம் ஆஸ்கருக்குப் போகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாகத்துக்கு அந்த நிலை வராத அளவுக்கு வேலைகளைச் செய்கிறது சந்திரபாபு நாயுடு அரசு.


Chandrababu Recommends Baahubali to Oscar

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், "பாகுபலி-2 படம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. இந்தப் படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பும்படி மத்திய அரசிடம் நிச்சயமாக சிபாரிசு செய்வேன்.


பாகுபலி-2 படக்குழுவினர் அனைவரையும் தலைநகர் அமராவதிக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தப் போகிறேன். இந்திய சினிமாவை தலை நிமிர வைத்துவிட்டது இந்தப் படம்," என்றார்.


இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் இந்தியப் படமாக பாகுபலி 2 இருக்கும் என்பது ஓரளவுக்கு இப்போதே உறுதியாகிவிட்டது. மத்திய அரசில் சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கு அந்த அளவுக்கு உள்ளது.

English summary
Andhra CM Chandrababu Naidu says that he would recommend Baahubali 2 to Oscar Nomination on behalf of Indian Cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil