»   »  அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க... இது கமல் அண்ணன் சந்திரஹாசன் நடித்த படம்!

அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க... இது கமல் அண்ணன் சந்திரஹாசன் நடித்த படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனின் அண்ணன் மறைந்த சந்திரஹாஸன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அதுவும் புதுப் படம். இன்னும் வெளியில் வராத படம். அதுபற்றிய விவரம்:

ஒரு முதியோர் இல்லம், முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி, அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள், காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள், இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை நகைச்சுவை திரைக்கதையாய் புதுமுக இயக்குநர் என் ஸ்டிபன் ரங்கராஜ் இயக்கியுள்ள படம் 'அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க'.

Chandrahassan's only movie Appathava Aattaya Pottuttanga

ஜிபி ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்காக பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆண்டனி மற்றும் லியோ விஷன் நிறுவனத்திற்காக விஎஸ் ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும், கதாநாயகியாக நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் டெல்லிகணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Chandrahassan's only movie Appathava Aattaya Pottuttanga

"படப்பிடிப்பின் போது பல ஆலோசனைகளை தந்து ஆசானாய் விளங்கிய சந்திரஹாசனின் மறைவு, இப் படக்குழுவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் இவ்வேளையில் அவரது நீங்கா நினைவாக இப்படம் அனைவரையும் கவரும்," என்கின்றனர் படக்குழுவினர்.

Chandrahassan's only movie Appathava Aattaya Pottuttanga

காஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

சந்திரஹாஸன் நடித்துள்ள ஒரே படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: chandra hassan
English summary
Kamal Hassan's late brother Chandrahassan was performed in a movie for the first time that titled as Appathava Aattaya Pottuttanga.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil