செம ஸ்பீடில் உருவாகி வரும் சந்திரமுகி 2.. லைகா அறிவித்த ஹாட் அப்டேட் என்ன தெரியுமா?

சென்னை: லைகா தயாரிப்பில் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தின் ஹாட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் சந்திரமுகி யார் என்பதை ரொம்பவே சஸ்பென்ஸாக வைத்து இயக்கி வருகிறார் இயக்குநர் பி. வாசு.

இந்நிலையில், பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸ் ரொம்ப டீப்பாக டிஸ்கஷன் செய்யும் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து அந்த அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது லைகா நிறுவனம்.

பிரம்மாண்ட படங்கள்

பிரம்மாண்ட படங்கள்

லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் காலடி வைத்ததில் இருந்தே பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது. லைகா தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான டான் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக வரும் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. மேலும், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களும் லைகா பேனரில் தயாராகி வருகின்றன.

ரஜினி இல்லாத சந்திரமுகி

ரஜினி இல்லாத சந்திரமுகி

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி 800 நாட்களுக்கு மேலாக தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது. இந்நிலையில், சந்திரமுகி 2வில் வடிவேலுவை தவிர இரண்டாம் பாதியில் பழைய நடிகர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லாரன்ஸ் தான் ஹீரோ

லாரன்ஸ் தான் ஹீரோ

காஞ்சனா வரிசை பேய் படங்களை இயக்கி 100 கோடி வசூலை ஈட்டிய ராகவா லாரன்ஸ் தான் சந்திரமுகி 2 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சிஷ்யனாக வரப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ராகவா லாரன்ஸ், வடிவேலு மற்றும் ராதிகா உள்ளிட்டவர்களின் காஸ்டிங் அறிவிப்பு மட்டுமே இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

முதல் ஷெட்யூல் ஓவர்

முதல் ஷெட்யூல் ஓவர்

வாம்மா மின்னல் என்பது போல சந்திரமுகி 2 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், அதன் முதல் ஷெட்யூல் மைசூரில் நிறைவடைந்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் பி. வாசு மற்றும் லாரன்ஸ் டிஸ்கஷன் செய்யும் போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறது லைகா. சந்திரமுகி 2 படத்தில் இந்த லுக்கில் தான் ராகவா லாரன்ஸ் வரப்போகிறார் என்பது உறுதியாகி விட்டது.

Recommended Video

Chandramukhi 2 | சந்திரமுகியாக நடிப்பது யார் தெரியுமா ? | Raghava Lawrence *Kollywood
யாருப்பா அந்த சந்திரமுகி

யாருப்பா அந்த சந்திரமுகி

சந்திரமுகி படத்தில் ஜோதிகா மிரட்டிய நிலையில், அப்படியொரு நடிப்பை 2ம் பாகத்தில் கொடுக்கப் போகும் அந்த ஹீரோயின் யாருப்பா என ரசிகர்கள் லைகா நிறுவனத்திடம் கேட்டு வருகின்றனர். த்ரிஷா, சாய் பல்லவி உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இதுவரை உறுதியான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X