»   »  லாரன்ஸ்- வடிவேலு கூட்டணியில் உருவாகிறது 'சந்திரமுகி 2'

லாரன்ஸ்- வடிவேலு கூட்டணியில் உருவாகிறது 'சந்திரமுகி 2'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரமுகி-2 வில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து வடிவேலு நடிப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த 2005 ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம் சந்திரமுகி.

ரஜினியுடன் இணைந்து பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, மாளவிகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சந்திரமுகி 2

சந்திரமுகி 2

சிவராஜ்குமார், வேதிகாவை வைத்து பி.வாசு இயக்கிய 'சிவலிங்கா' திரைப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரில்+கிரைம் என்ற ரீதியில் உருவான இப்படத்தில் நடிகர் சக்திவேல் வாசுவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் தற்போது சந்திரமுகி-2 என்ற பெயரில் உருவாகவுள்ளது.

லாரன்ஸ்

லாரன்ஸ்

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, தற்போது லாரன்ஸ் நடிப்பது உறுதியாகியுள்ளது. லாரன்ஸுடன் இணைந்து முக்கிய வேடத்தில் வடிவேலுவும் நடிக்கவிருக்கிறார். சிவலிங்காவை கன்னடத்தில் இயக்கிய வாசுவே தமிழிலும் இயக்குகிறார்.

அனுஷ்கா

அனுஷ்கா

தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா, இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிப்பார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

வடிவேலு

வடிவேலு

சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.தற்போது சந்திரமுகி 2 விலும் வடிவேலு நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கான நடிக, நடிகையர் தேர்வு முடிந்தவுடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக சந்திரமுகி-2 குறித்து அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

English summary
Actor Raghava Lawrence Team up with Vadivelu for Chandramuki 2. The Official Announcement Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil